வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பட்டாசுகள் மற்றும் இனிப்பு வழங்கி தவெகவினர் கௌரவிப்பு!

வேலூர், நவ. 8-
மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நல்வழியில், கழகப் பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சரின் வழிகாட்டுதலோடு,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு பட்டாசு பாக்ஸ் (ம) இனிப்பு வழங்கி தவெக இளைஞரணி சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
வேலூர் பில்டர் பெட் சாலையில் உள்ள ஆசிரியர் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாண்புமிகு. கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர், ஈரோடு மாவட்டத்தின் சிங்கம் அன்பு அண்ணன் எம்.விஜய்பாலாஜி தலைமை வகித்து தூய்மை பணியாளர்களை கௌரவித்தார்.
வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், வேலூர் மேற்கு (ம) கிழக்கு மாவட்ட கழக செயலாளர்கள் வேல்முருகன், நவீன் முன்னிலை வகித்தனர்.
இவர்களுடன் மாவட்ட கழக தோழர்கள், இளைஞரணி கழக தோழர்கள், மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வேலூர் காகிதப் பட்டறை வெ. பாரத் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் அறுசுவை விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் இளைஞரணியினருடன் இணைந்து வெகு விமரிசையாக செய்திருந்தார்.