பேரணாம்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பரிதாப பலி!

வேலூர்,நவ.6-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தி ருந்தார் ரங்கநாதன் (70). இந்நிலையில் அவர் தனது நிலத்தில் பயிர்களை பார்த்துவிட்டு களைகளை களைந்து விட்டு வரும்போது நிலை தடுமாறி அந்த சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் தவறி விழுந்தார். இந்நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அவரது மகன் சுரேஷ் தந்தையை காப்பாற்ற ஓடி வந்து அவரை தொட்டார். உடனே அவருடைய உடலிலும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி அதே இடத்தில் மகனும் இறந்தார். தந்தை, மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் அந்தப் பகுதியே மிகவும் சோகமயமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.