வேலூர் வாசன் ஐ கேர் கண் மருத்துவச் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு!

வேலூர்,நவ.7-
வேலூரில் பட்டாசு வெடி விபத்துகளால் ஏற்படும் கண் பாதிப்புகளுக்கு நவம்பர் 15-ஆம் தேதி வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேலூர், ஆபீசர்ஸ் லைனில் அமைந்துள்ள வாசன் ஐ கேர் கண் மருத்துவமனை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்பது மற்றும் அவற்றைக் கையாளும் முறைகள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தீபாவளிப் பண்டிகையை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பட்டாசுகளை வெடிக்கும்போது அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பட்டாசு வெடிக்கும் இடத்தில் வாளியில் தண்ணீர், மணல் மற்றும் ஈரமான கோணிப் பைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கண்களில் ரசாயனப் பொருட்கள் மற்றும் பட்டாசுத் துகள்கள் படாமல் இருக்க பாதுகாப்புக் கண்ணாடி அணிய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளைக் கையாளும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பட்டாசுகளை வெடிக்கும்போது பாதுகாப்பான தூரத்தில் நின்று, ஊதுபத்தி மூலம் நெருப்பைப் பற்ற வைத்து, ஒருபுறமாக விலகி நின்று பட்டாசுகளை வெடிக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடி விபத்தால் கண்களில் தீக்காயம் அல்லது காயம் ஏற்பட்டால் கண்களைத் தேய்க்கக் கூடாது. உடனடியாக வாசன் ஐ கேர் கண் மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வாசன் ஐ கேர் வேலூர் மண்டல மாவட்ட அலுவலக நிர்வாக அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். கண் மருத்துவர்கள் டாக்டர் சர்வேஸ்வரன், டாக்டர் கிருத்திகா சுந்தரி, டாக்டர் சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கண் மருத்துவமனை செவிலியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

15 ஆண்டுகளாகத் தொடரும் இலவச கண் மருத்துவச் சேவை!

பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்பது மற்றும் அவற்றைக் கையாளும் முறைகள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தீபாவளிப் பண்டிகையை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடனும் ,உற்சாகத்துடனும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பட்டாசுகளை வெடிக்கும்போது அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.