வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை-அன்னதானம்!வேலூர், ஜூன் 23-தமிழக முதல்வர் தலைவர் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர் .வேல்முருகன் தலைமையில் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை எஸ்.கலைமதி மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர், ராமமூர்த்தி விருப்பாட்சிபுரம் பகுதி செயலாளர் செய்திருந்தனர்.இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் பிரசாந்த், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் தனசேகர், தோட்டப்பாளையம் பகுதிச் செயலாளர் பாரத் மற்றும் கழக நிர்வாகிகள் ஆனந்த பிரியா, பூஜா, சரளா, லட்சுமி, புஷ்பா, அமலா, யாமினி, ராஜேஷ், சுகுமார், சிவசங்கர், அஜய், அரவிந்த் ,ப்ரேம், பரத் ,செல்வம், ஆனந்த், சாரதி, வினோத், அன்பு, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேருந்தில் குழந்தையின் கையில் இருந்த தங்கக் காப்பை திருடிய பலே பெண்மணி கைது!விழுப்புரம், ஜூன் 23-பஸ் ஏறும் போது 2 வயது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த சின்னகோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஜெயப்பிரியா (26). இவர் நேற்றுமுன்தினம் நண்பகல் 12:00 மணியளவில் செஞ்சியில் இருந்து கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்கு தனது 2 வயது குழந்தையுடன் தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது ஜெயப்பிரியாவின் பின்னால் இருந்த புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மேரி (56) குழந்தையின் கையில் இருந்த 1 சவரன் தங்கக் காப்பை கழற்றியுள்ளார். இதைப் பார்த்த ஜெயப்பிரியா கூச்சல் போட்டதும் அருகில் இருந்தவர்கள் மேரியை பிடித்தனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேரியை கைது செய்தனர்.

காட்பாடியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்!வேலூர், ஜூன் 22-காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநிலத் தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச்செயலாளர் பெருமாள், செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் மாவட்ட தலைவர் குமரவேல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சங்கர் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் அழகுசுந்தரமும், மாநில பொருளாளர் பிச்சைகண்ணு சிறப்புறையும் ஆற்றினர்.வேலூர் மாவட்ட தலைவர் நடராஜன், செயலாளர் கண்ணபிரான், பொருளாளர் குமரவேல், அணைக்கட்டு பிரிவு லோகநாதன், ராஜேந்திரன், சாமிநாதன், காட்பாடி பகுதி மார்கண்டேயன், ஜார்ஜ், லோகநாதன், ஜெயசங்கர், கஜேந்திரன், சிட்டிபாபு, விநாயகம், சேன் மற்றும் மாநில துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமீப காலங்களில் உயிரிழந்துள்ள சாலை பணியாளர்களுக்கு இந்த செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.புதியதாக தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் தவெக ஆட்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறது. நெடுஞ்சாலை துறையில் சாலைப் பணியாளர்களாக பணியாற்றி உயிரிழந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தர ஊதியம் ரூ.1900 – ஆக உயர்த்தி அன்ஸ் கில்டு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார்.

செய்யாறில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில்முப்பெரும் விழா கோலாகலம்!செய்யாறு, ஜூன் 22 -செய்யாறு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் மணி, பொருளாளர்சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதியோர் இல்லங்களை நடத்தி முதியோர்களை கடைசி காலங்களில் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் ஆர்.ஸ்ரீதருக்கும், கண் தானத்தின் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் எம்.சண்முகம் ஆகிய இருவருரையும் கெளரவித்தல், சங்கத்தின் 8ம் ஆண்டு வட்ட பேரவை விழா, 70 ஆண்டுகள் பூர்த்தி செய்த ஓய்வூதியர்களை கெளரவித்தல் என முப்பெரும் விழா நடந்தது.கூட்டத்தில் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அனைத்து மருத்துவமனைகளிலும் கொண்டு வர புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழைய ஊதிய திட்டத்தை புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். வட்டக் கிளை இணைச் செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

மாங்காய் பறிக்க மரத்தில் ஏறிய நபர் கீழே விழுந்து உயிரிழந்த பரிதாபம்!வேலூர், ஜூன் 21-வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள பழைய போன் மில் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (57). இவர் முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றினார். அவர் தனது வீட்டில் உள்ள மா மரத்தில் மாங்காய்களைப் பறிப்பதற்காக மரத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது அவர் நின்றுகொண்டிருந்த ஒரு சிறிய மரக்கிளை எதிர்பாராதவிதமாக திடீரென முறிந்தது.இதனால் நிலைதடுமாறி மரத்திலிருந்து மணி கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.போலீசார் மணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..வீட்டில் இருந்த மாமரத்தில் மாங்காய் பறிக்கச் சென்றவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டால் வாழ்க்கையே செழிக்கும்’ :கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை !செய்யாறு, ஜூன் 21 -செய்யாறு அருகே முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி மாணவ – மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது.செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டதுஅசனமாபேட்டை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் தில்லை கார்த்தி. இவர் திருவண்ணாமலை த.வெ.க.,வின் கிழக்கு மாவட்டத்தின், மாவட்ட அமைப்பாளராக பொறுப்பும் வகித்து வருகிறார். இங்கு வடமனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெருங்கட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் இயங்கி வருகிறது.இந்த பள்ளிகளில் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு – பிளஸ் 2 ஆகிய பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 52 மாணவ – மாணவிகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 52 மாணவ – மாணவிகளுக்கு கல்வி விருதாக ‘கேடயம் – பண முடிப்பு’ ஆகியவற்றை வழங்கி அவர் பேசியதாவது; ‘பள்ளி பருவம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகும். படிப்புடன் ஒழுக்கத்தையும் கற்றுக் கொண்டால் வாழ்க்கை செழிக்கும். நீங்கள் கடந்தாண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கும் உங்களது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.இதற்காகத்தான் உங்களுக்கான பாராட்டு விழாவை மாவட்ட அமைப்பாளர் தில்லை கார்த்தி ஏற்பாடு செய்துள்ளார். அவரையும் இந்த தருணத்தில் பாராட்டுகிறேன். கிராமப்புறங்களைச் சேர்ந்த அனைவரும் நன்கு படித்து விட்டால் நாடு முன்னேற்றப் பாதைக்கு சென்றுவிடும். இவ்வாறு மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசினார்.இந்நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வி.ரஞ்சித்குமார், செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், அமைப்பாளர்கள் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் என, பலரும் கலந்து கொண்டனர்.