ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்!வேலூர், ஜூன் 7-வேலூர் ஆபீஸர்ஸ் லைனில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் திருமலைக்கோடி ஸ்ரீ புரம், அரியூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பாலாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட நாயுடுகள் சங்கத் தலைவர் 7 ஜி முரளிதரன் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பக்தர்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த எளிய நிகழ்ச்சியில் போளூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.