பேரணாம்பட்டு ஜெ. ஜெ.,நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைக்கு தடை வருமா?வேலூர், ஜூன் 6-வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு 2வது வார்டு ஜெயலலிதா நகரில் ஏரி குத்தியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. ஜெயலலிதா நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அருகில் காடு இருப்பதால் நடை பயிற்சிக்கும், விறகு சுல்லிகள் சேகரித்து அடுப்பு எரிக்க எடுத்து செல்லவும் இந்தச் செங்கல் சூளை வழியாகத்தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் சிவக்குமார் என்பவர் மேலும் மேலும் பள்ளத்தை வெட்டி பொதுமக்கள் நடக்கவும், அந்த வழியாகச் சென்று வரவும் சொல்லொனாத் தொந்தரவு கொடுக்கிறார். எத்தனையோ பேர் இப்பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவக்குமார் விற்கும் செங்கற்களை பணக்காரர்களுக்கு விலை குறைவாகவும், ஏழைகளுக்கு விலை அதிகமாகவும் கூறி கட்டணம் பெறுகிறார். இதனால் ஏழை மக்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் இருந்து சிவக்குமாரின் செங்கல் சூளைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்பதே இப்பகுதி வாழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அளவிற்கு சிவக்குமார் தயாரித்து விற்பனை செய்யும் செங்கற்களை தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை நிரந்தரமாக செய்து வருகிறார். தொடர்ந்து தான் செய்வது தவறு என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் தவறு செய்து வரும் சிவக்குமாரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.