பேரணாம்பட்டு ஜெ. ஜெ.,நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைக்கு தடை வருமா?வேலூர், ஜூன் 6-வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு 2வது வார்டு ஜெயலலிதா நகரில் ஏரி குத்தியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளை ஒன்று இயங்கி வருகிறது. ஜெயலலிதா நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அருகில் காடு இருப்பதால் நடை பயிற்சிக்கும், விறகு சுல்லிகள் சேகரித்து அடுப்பு எரிக்க எடுத்து செல்லவும் இந்தச் செங்கல் சூளை வழியாகத்தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் சிவக்குமார் என்பவர் மேலும் மேலும் பள்ளத்தை வெட்டி பொதுமக்கள் நடக்கவும், அந்த வழியாகச் சென்று வரவும் சொல்லொனாத் தொந்தரவு கொடுக்கிறார். எத்தனையோ பேர் இப்பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவக்குமார் விற்கும் செங்கற்களை பணக்காரர்களுக்கு விலை குறைவாகவும், ஏழைகளுக்கு விலை அதிகமாகவும் கூறி கட்டணம் பெறுகிறார். இதனால் ஏழை மக்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் இருந்து சிவக்குமாரின் செங்கல் சூளைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்பதே இப்பகுதி வாழ் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அளவிற்கு சிவக்குமார் தயாரித்து விற்பனை செய்யும் செங்கற்களை தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை நிரந்தரமாக செய்து வருகிறார். தொடர்ந்து தான் செய்வது தவறு என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் தவறு செய்து வரும் சிவக்குமாரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

காட்பாடியில் குட்கா கடத்தியவர் கைது: 10.5 கிலோ குட்கா பறிமுதல்!வேலூர், ஜூன் 6-வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகே காட்பாடி காவல் நிலைய போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது உடமைகளை போலீஸார் சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘ஹான்ஸ்’ மற்றும் ‘கூல் லிப்’ ஆகிய புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காகக் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.அவரிடமிருந்து மொத்தம் 10.5 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை (270 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 270 கூல் லிப் பாக்கெட்டுகள்) போலீஸார் பறிமுதல் செய்தனர்.இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம், ஆழ்வார்திருநகர், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பழனி (53) என்பவர் மீது காட்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் தொடக்கம்! வேலூர் ,ஜூன் 6 -வேலூர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்பூண்டி ஏரிக்கரையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்நிகழ்வின் போது அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். பிரேமலதா ,பொய்கை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மாவட்ட பசுமை ஒருங்கிணைப்பாளர் செல்வி. நாகதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த ஆயிரம் மரக்கன்றுகளும் வளர்ந்து வேலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்து இந்த சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’ என்ற ஸ்லோகன் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ வள்ளிமலை முருகன் மலைக் கோவில் அடிவாரத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுப்பு!வேலூர், ஜூன் 5-வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், வள்ளிமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளிமலை முருகன் மலைக் கோவில் அடிவாரத்தில் கோவில் இடத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதாகவும், வீடு கட்ட பாறைகள் உடைத்து எடுப்பதாகவும் வள்ளிமலை கிராம பொதுமக்கள் இந்து முன்னணிக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்கு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சென்று அவ்விடத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உடன் இருந்து விசாரணை செய்ததில் அவ்விடம் பட்டா இடம் என கூறினர். பிறகு பட்டா இடமாக இருந்தாலும் உலகப் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் அடிவாரத்தில் பாறைகளை வெட்டி எடுப்பதும், மண் எடுப்பதும் என்பது கோவிலின் பழமையையும், தொன்மையையும் மாற்ற முயற்சிப்பது குற்றச்செயலாகும். வருவாய்த் துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் அறநிலையத்துறையினர் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் கடவுள் முருகன் வள்ளி மணந்த இடம்.இதனால் இக்கோயிலுக்கு வள்ளி மலை என பெயர் வந்தது . சித்தர்களும், ஞானிகளும் தவம் புரிந்த இடம். இப்படி வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னத்தை அழிக்க நினைக்கும் நபர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கவும், கோவிலுக்கு அருகாமையில் வழங்கப்பட்டுள்ள பட்டாவினை ரத்து செய்து உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு கோரிக்கை வைத்து கோவிலின் தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மனு வழங்கப்பட்டது. இந்த கோரிக்கை மனு மீது வருவாய் துறை நடவடிக்கை எடுக்குமா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேனல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளில்தலைமை ஆசிரியர் தயாளன் தலைமையில்உற்சாக வரவேற்பு!செய்யாறு, ஜூன் 5 -மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முதல் நாளில் வருகை புரிந்த மாணவ – மாணவிகள் அனைவருக்கும், பள்ளி சார்பில் மேள தாளங்களுடன் இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்டது செய்யாறு அடுத்துள்ளது மேனல்லூர் கிராமம். இங்கு அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 370 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக கனிகிலுப்பு கிராமத்தைச் சேர்ந்த தயாளன் ( 55 ) பணியாற்றி வருகிறார். இவர், கடந்தாண்டு பொறுப்பேற்றது முதல் பள்ளிக்கு கூடுதல் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட கழிவறைகள், கூடுதல் நீர்த்தேக்க தொட்டிகள், மாணவர்களுக்கான புதிய மேசைகள் என, அனைத்தும் தலைமை ஆசிரியர் தயாளன் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. குறிப்பிடத்தக்கது.இதனால், மாணவர்களின் சேர்க்கை இவ்வாண்டு அதிகரிக்கும் என, கிராம மக்கள் கூறுகின்றனர். தற்பொழுது கோடை விடுமுறை முடிந்து 4ம் தேதி முதல் பள்ளி திறக்கப்பட்டது. இந்த திறப்புவிழாவையொட்டி பள்ளியின் நுழைவு வாயிலில் வாழை மரங்கள், மூவர்ண பலூன்கள், தோரணங்கள் தொங்க விடப்பட்டிருந்தன. சிவப்பு – பச்சை நிறங்களில் கம்பளங்கள் விரிக்கப்பட்டு பள்ளியே விழா கோலமாக காட்சியளித்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்முத்தமிழ் அறிஞர்! தலைவர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டுமேட்டுப்பாளையம் ஓடந்துறையில் இளைஞர் அணி சார்பாக நகர இளைஞர் அணி அமைப்பாளர் SN.சேட் தலைமையில்,முன்னாள் நகர செயலாளர் சி.மு.முகமது யூனூஸ் முன்னிலையில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் பா.அருண்குமார் சிறப்புரையாற்றினார்!தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி,கேக் வெட்டியும்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அண்ணன் MARK.ஹக்கீம் அவர்கள்இனிப்புகள் வழங்கியும், சிறப்பாக கொண்டாடப்பட்டது!இந்த விழாவில் நகர திமுக மூத்த முன்னோடிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்மணி, சதீஷ்,மோகன்,அசாருதீன்,மு.அகமது சபீக் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்!!

வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை : ரூ. 32 ஆயிரம் பறிமுதல்!வேலூர், ஜூன் 5-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆரணி சாலை வேலப்பாடியில், வேலூர் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடியது. இந்த அலுவலகத்தை பல்வேறு தேவைகளுக்காக நாடிச் செல்லும் பொதுமக்களிடம் பகல் கொள்ளை போல பணத்தை பறித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்ற வண்ணம் இருந்தது. இந்நிலையில்இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குனரக துறை வேலூர் டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை யில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 32 ஆயிரம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக வேலூர் சார் பதிவாளர் பத்மபிரியாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனி அறையில் வைத்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.