

2025-ஆம் ஆண்டிற்கான தேசிய பஞ்சாயத்து விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி டெல்லியில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து விருது வழங்கும் விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு தேசிய அளவிலான ஊரக வளர்ச்சித் துறையில் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய வகையில் ஊராட்சி ஒன்றியத்திற்கான விருது, சிறந்த கிராம ஊராட்சி விருது உள்ளிட்ட விருதுகள் கிடைத்திருக்கிறது. அதன்படி சிறப்பு விருதுகளை முறையே கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் க. கிரியப்பனவர், கோயம்புத்தூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சங்கேத் சிங் பல்வாகே, ஊரக வளர்ச்சி( ஊராட்சிகள் மற்றும் தணிக்கை - மேற்கு மண்டல)உதவி இயக்குநர் செந்தில் வேல் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்( ஊராட்சிகள் மற்றும் தணிக்கை - கிழக்கு மண்டலம்) பாலசுப்பிரமணியம் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சிக்கு நானாஜி தேஷ்முக் சர்வோத்தம் பஞ்சாயத்து சதாத் விகாஸ் புரஸ்கார் என்ற பெயரில் சிறப்புவிருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விருது கோவை மாவட்டத்திற்கு மட்டுமல்ல இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை ஆகும். கோவை மாவட்டத்திற்கு கிடைத்த இந்த விருதிற்கு மாவட்ட ஆட்சியர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களின் பங்கு பாராட்டத்தக்கது.










Leave a Reply