சமூக ஆர்வலர் குணா தோழரின் குடும்ப விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசேகரன் – சித்ரா தம்பதியினரின் தவப்புதல்வி தாரணியின் சீர் நிகழ்ச்சி இன்று மேட்டுப்பாளையம் சேரன் மஹால் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தாரணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும், சி.ஐ.டி.யு. பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டு மணமகளை வாழ்த்தி, குடும்பத்தினருக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, குடும்பத்தினரின் சிறப்பான ஏற்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெற்றது.