
ஸ்ரீ வள்ளிமலை முருகன் மலைக் கோவில் அடிவாரத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுப்பு!வேலூர், ஜூன் 5-வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், வள்ளிமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளிமலை முருகன் மலைக் கோவில் அடிவாரத்தில் கோவில் இடத்தில் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதாகவும், வீடு கட்ட பாறைகள் உடைத்து எடுப்பதாகவும் வள்ளிமலை கிராம பொதுமக்கள் இந்து முன்னணிக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்கு உறுப்பினர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சென்று அவ்விடத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உடன் இருந்து விசாரணை செய்ததில் அவ்விடம் பட்டா இடம் என கூறினர். பிறகு பட்டா இடமாக இருந்தாலும் உலகப் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் அடிவாரத்தில் பாறைகளை வெட்டி எடுப்பதும், மண் எடுப்பதும் என்பது கோவிலின் பழமையையும், தொன்மையையும் மாற்ற முயற்சிப்பது குற்றச்செயலாகும். வருவாய்த் துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் அறநிலையத்துறையினர் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் கடவுள் முருகன் வள்ளி மணந்த இடம்.இதனால் இக்கோயிலுக்கு வள்ளி மலை என பெயர் வந்தது . சித்தர்களும், ஞானிகளும் தவம் புரிந்த இடம். இப்படி வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னத்தை அழிக்க நினைக்கும் நபர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கவும், கோவிலுக்கு அருகாமையில் வழங்கப்பட்டுள்ள பட்டாவினை ரத்து செய்து உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு கோரிக்கை வைத்து கோவிலின் தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மனு வழங்கப்பட்டது. இந்த கோரிக்கை மனு மீது வருவாய் துறை நடவடிக்கை எடுக்குமா? அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










Leave a Reply