Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Year:
2026
வேலூர் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை : ரூ. 32 ஆயிரம் பறிமுதல்!வேலூர், ஜூன் 5-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆரணி சாலை வேலப்பாடியில், வேலூர் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடியது. இந்த அலுவலகத்தை பல்வேறு தேவைகளுக்காக நாடிச் செல்லும் பொதுமக்களிடம் பகல் கொள்ளை போல பணத்தை பறித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்ற வண்ணம் இருந்தது. இந்நிலையில்இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குனரக துறை வேலூர் டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை யில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 32 ஆயிரம் ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக வேலூர் சார் பதிவாளர் பத்மபிரியாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனி அறையில் வைத்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஆர்வலர் குணா தோழரின் குடும்ப விழா கோலாகலமாக நடைபெற்றது
வேலூர் 45 வது வார்டில் கவுன்சிலர் அஸ்மிதா அன்னதானம் வழங்கல்!வேலூர், ஜூன் 4-வேலூர் ஆரணி ரோட்டில் 45 வது வார்டு திமுக கவுன்சிலர் அஸ்மிதா கோபிநாதன் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் மற்றும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கவுன்சிலர் அஸ்மிதா கோபிநாதன் அன்னதானம் வழங்கினார். சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அன்னதானம் வாங்கி உண்டு மகிழ்ந்தனர். இந்த எளிய விழாவில்பைனான்சியர் லட்சி என்கின்ற லட்சுமணன், கோபிநாதன், கிரண் குமார், கணேஷ், கட்சி நிர்வாகி கணபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் பகுதியில் திமுக சார்பில் கருணாநிதியின் 103வதுபிறந்த நாள் விழா!செய்யாறு, ஜூன் 4-செய்யார் அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கனிகிலுப்பை கிராமத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்103வது பிறந்தநாள் விழா, ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது. இங்கு நிறுவப்பட்டிருந்த திடலில் திரண்ட பொதுமக்கள் 100 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.
ஆவணங்களின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தல்: காட்பாடி அருகே டிப்பர் லாரி பறிமுதல்!வேலூர், ஜூன் 3-ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காட்பாடி எல்லைப் பகுதியில் கனிம வளத்துறையின் தனி வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் மற்றும் எவ்வித அனுமதியுமின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து, அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த தனி வருவாய் அலுவலர் மேல் நடவடிக்கைக்காக காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்பாடி அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் உயிரிழப்பு!வேலூர், ஜூன் 3-காட்பாடி ரயில்வே காவல் எல்லைக்குட்பட்ட திருவலம் – சேவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீஸார் இறந்தவர் உடலைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அ.தி.மு.க., மு.மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நீலாவதி தலைமையில் 100 பேர் அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம்!காஞ்சிபுரம், ஜூன் 3 -காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெ.நீலாவதி தலைமையில் மகளிர் உட்பட 100 பேர் அமைச்சர்ஆர்.வி.ரஞ்சித்குமார் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தனர். இந்த புதியவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து அடையாள அட்டைகளை வழங்கி வரவேற்றார்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் நீலாவதி ( 52 ). அ.தி.மு.க.,வில் 30 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட இவர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். முன்னாள் அமைச்சர்களான வி.சோமசுந்தரம், வளர்மதி அகியோரின் ஆலோசனைப்படி கட்சிப் பணிகளை சிறப்பாக ஆற்றி வந்தவர். இவரது தலைமையில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கீதா, பகுதி மகளிர் அணி பொறுப்பாளர்களான மாதவி, லட்சுமி ஆகியோரும்.என்.ஜி.சித்தையன், சையத் அலி, எஸ்.சத்யா, ஜெயசூரியா, ரஞ்சனி பிரியா, லலிதா, பொற்கொடி, கலாவதி, சாருமதி ஆகியோரும்மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த வத்சலா, முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவரான குமரேசன், அய்யனார் உள்ளிட்ட 100 பேர் காஞ்சிபுரம் சுற்றுலா மாளிகையில் வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இவர்களுக்கு த.வெ.க.,வின் அடையாள அட்டைகளும் உடனடியாக வழங்கப்பட்டது. த.வெ.க.,வில் இணைந்த முன்னாள் ஊராட்சி குழு தலைவர் ஜெ.நீலாவதி உள்ளிட்ட அனைவருக்கும் அமைச்சர்ஆர்.வி.ரஞ்சித்குமார் சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள்உடனிருந்தனர்.
மதுவிலக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 9ம் தேதிபொது ஏலம் அறிவிப்பு!வேலூர், ஜூன் 3-வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 14(4)-ன்படியும், மறுமதிப்பீடு செய்யப்பட்ட மதுவிலக்கு வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுவிலக்கு வழக்கு இருசக்கர வாகனங்கள் 63, மூன்று சக்கர வாகனங்கள் என -மொத்தம்-65 மற்றும் கஞ்சா வழக்குகளில் இருசக்கர வாகனங்கள் -07, –02 02, மொத்தம் -09 (65+09) ஆகிய வாகனங்கள் வரும் 09.06.2026 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 09.00 மணி முதல் வேலூர் மாவட்ட ஆயுதப்படை நேதாஜி ஸ்டேடியம் மைதானத்தில், வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100/- நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். அதேபோல் கஞ்சா வழக்கு லாரியை ஏலம் எடுக்க வருவோர் ரூ.5,000/- முன்பணம் வைப்பு தொகை செலுத்தப்பட வேண்டும். ஏலத்தொகையுடன் இரு சக்கர வாகனங்களுக்கு 12% மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18% விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான இரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும். இவ்வாறு அந்த பத்திரிகை செய்தி குறிப்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
செய்யாறில் விடுதலை போராட்ட தியாகி அஞ்சலை அம்மாவின்பிறந்தநாள் விழா த.வெ.க., சார்பில் கொண்டாட்டம் !செய்யாறு, ஜூன் 2 -செய்யாறில் விடுதலைப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாவின் பிறந்தநாள் விழா த.வெ.க., சார்பில் கொண்டாடப்பட்டது.செய்யாறு பஸ் நிலையம் அருகே நடந்த இவ்விழாவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். த.வெ.க., பொறுப்பாளர்கள் முன்னிலையில் அஞ்சலை அம்மாவின் திருவிழா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு தெற்கு நகர செயலாளர் சந்தோஷ், வடக்கு நகர செயலாளர் அருண், ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள், செய்யார் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.
1
…
30
31
32
…
93
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.