செய்யாறில் விடுதலை போராட்ட தியாகி அஞ்சலை அம்மாவின்பிறந்தநாள் விழா த.வெ.க., சார்பில் கொண்டாட்டம் !செய்யாறு, ஜூன் 2 -செய்யாறில் விடுதலைப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாவின் பிறந்தநாள் விழா த.வெ.க., சார்பில் கொண்டாடப்பட்டது.செய்யாறு பஸ் நிலையம் அருகே நடந்த இவ்விழாவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். த.வெ.க., பொறுப்பாளர்கள் முன்னிலையில் அஞ்சலை அம்மாவின் திருவிழா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு தெற்கு நகர செயலாளர் சந்தோஷ், வடக்கு நகர செயலாளர் அருண், ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள், செய்யார் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.