காட்பாடி அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் உயிரிழப்பு!வேலூர், ஜூன் 3-காட்பாடி ரயில்வே காவல் எல்லைக்குட்பட்ட திருவலம் – சேவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீஸார் இறந்தவர் உடலைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.