Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Month:
April 2026
தமிழகத்தில் 2026 நடக்கவிருக்கும் தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் முன்னாள் நரசிபுரம் ஊராட்சி தலைவருமான கார்த்திகேயன் என்பவர் இன்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி இருந்தார்.
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் 20 26 தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிலும் வேட்பாளர் எஸ் பி வேலுமணி இன்று பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று வெளியில் வந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து தான் இத்தனை வருடங்களாக தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து உள்ளதாகவும் அவர் இருந்த நாட்களில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பதவியில் இருந்து கோவையில் உள்ள மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுத்ததாகவும் அதே வேலையில் வரும் நாட்களில் தங்களது பொதுச்செயலாளர் நிச்சயம் முதலமைச்சர் ஆவார் என்றும் அவர் வந்த பிறகு மீண்டும் தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த நல்லாட்சியை கொடுப்போம் என்று சொன்னார்.
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு!வேலூர்,ஏப்.6-தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. காட்பாடி தொகுதியில் இருமுனை போட்டி நிலவுகிறது. அதாவது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த முறை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அதிமுக வேட்பாளர் ராமு இந்த முறை நூதன முறையில் பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டார். அந்த பிரச்சாரத்தில் கடந்த 5ம் தேதி காட்பாடி பவானி நகர், முத்தமிழ் நகர், காட்பாடி ரயில் நிலையம், பழைய காட்பாடி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு திறந்த ஜுப்பில் இருந்து இறங்கி வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்காளர்கள் ஆரவாரத்துடன் ராமுவை வரவேற்று தாங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது அமமுக பிரமுகர் ராஜா மற்றும் பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிமுக வேட்பாளர் ராமுவுடன் சென்றனர்.
வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கார்த்திகேயன்!வேலூர், ஏப். 6-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், திமுக வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன், வேலூர் சிஎஸ்ஐ மத்திய ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சபை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருடன் பகுதி கழக செயலாளர் சுந்தர் விஜி ,மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், ஆண்கள் ஐக்கிய சங்கத்தின் செயலாளர் ஆர்.டேவிட் ராஜ்குமார்உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் உடன் இருந்தனர்.
ஈஸ்டர் திருநாளில் சி. எஸ். ஐ. தேவாலயத்தில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 6-துன்பங்கள் போக்கி துணைநிற்க உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை போற்றும் இனிய நாளில் காட்பாடியில் உள்ள சி. எஸ். ஐ. தேவாலயத்தில் மக்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார் திமுக காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன். அப்போது தேவாலயத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் தனக்கு வழக்கம் போல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களையும் அங்கிருந்த பொதுமக்களுக்கு தெரிவித்து மகிழ்ந்தார் திமுக வேட்பாளர் துரைமுருகன். திமுக வேட்பாளர் துரைமுருகனுடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ,காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.
குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்!
குடியாத்தம் நகரில் 4 வார்டுகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பரிதா!வேலூர், ஏப். 6-குடியாத்தம் நகரம் ,வார்டு 20,21,23,35ல் உள்ள வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து தனது வெற்றிக்கு உழைக்குமாறு குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். அவர் மேலும் கூறுகையில் ஒரு வாக்காளர் விடாமல் ஒரு வீடு விடாமல் வாக்காளர்களை நேரில் சந்தித்து தொண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும் அவர் அன்புடன் கேட்டுக் கொண்டார்.குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர்ஜி.பரிதா புருஷோத்தமனுடன்,அதிமுக குடியாத்தம் நகர செயலாளர்ஜே. கே. என். பழனி மற்றும் குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்சதீஷ் சங்கர் ஆகியோர் இருந்தனர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களையும் நேரில் சந்தித்து தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார் அதிமுக வேட்பாளர் பரிதா.
வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் வேலழகனைசந்தித்து அதிமுகவில் ஐக்கியமான மாற்று கட்சியினர்!
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சாயல்குடி தேர்தல் சோதனை சாவடியில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி இருந்த தங்க நகைகள்.ரூபாய். 9,47,22,868. (மதிப்பிலான)நகைகள்பறிமுதல் செய்து.துணை வட்டாட்சியர் ராம்குமார், வருவாய் ஆய்வாளர் அழகுபாண்டி.திருச்செல்வம். வி.ஏ.ஓகிராம உதவியாளர்சுரேஷ் கண்ணன்.முன்னிலையில் ஒப்படைத்தனர். என்பது குறிப்பிடதக்கது
அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி மகமதுபுரத்தில் திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!
1
…
11
12
13
14
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.