குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா குடியாத்தம் நகரில் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 8-குடியாத்தம் தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.பரிதாபுருஷோத்தமன் செவ்வாய்கிழமை (07-04-2026)காலை 8.30 ஆரம்பித்து ஜெ.ஜெ.,நகர், எம்.ஜி.ஆர்.நகர் , கலைஞர் நகர் , புதிய லைன், தரைக்காடு, சிவராஜ் நகர், அத்திப்பட்டி, டெலிபோன் ஆபீஸ் தெரு, பஜார் வீதி, சின்ன பஜார் வீதி, மாவு மிஷன் தெரு ஆகிய இடங்களில் தெருத் தெருவாக மக்களோடு மக்களாய் சென்று வாக்குகள் சேகரித்தார். பரிதா வாக்காளர்களிடம் பேசுகையில், இந்த குடியாத்தம் தொகுதிதான் எனக்கு கோயில். வாக்காளர்களாகிய நீங்கள்தான் எனக்கு தெய்வங்கள் என்று கூறி வாக்காளர்களின் மனங்களை தட்டி எழுப்பி அவர்களை கவர்ந்து தங்களது வாக்குகளை அதிமுக வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக அளித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வீடுகள் தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பரிதா கேட்டுக் கொண்டார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.

குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் வேட்புமனு தாக்கல்!வேலூர், ஏப். 7-தேசிய ஜனநாயக கூட்டணி குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் 6ம் தேதி தனது வேட்பு மனுவினை தொகுதி தேர்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான செல்வி. சுபலட்சுமியிடம் தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனு தாக்கலின் போது அதிமுக குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜே. கே. என். பழனி, பேரணாம்பட்டு ஒன்றிய கழகச் செயலாளர் பொகளூர் பிரபாகரன், பாரதிய ஜனதா கட்சியின் தொகுதி பொறுப்பாளர் மகேஷ், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, மேலும் மாற்று வேட்பாளர் சம்பத், அதிமுக பேரணாம்பட்டு நகரக் கழகச் செயலாளர் சீனிவாசன், புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பி. செந்தில்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.அருணோதயம், குடியாத்தம் தொகுதி கழக தேர்தல் பொறுப்பாளர் சதீஷ் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வேட்புமனு தாக்கலின் போது இரட்டை இலை தழைத்தது. முரசு சத்தமே இன்றி முடங்கிப் போனது. திமுகவினர் குடியாத்தம் தொகுதி யில் பணியாற்றாமல் பக்கத்து தொகுதிகளான கே.வி.குப்பம் மற்றும் அணைக்கட்டு ஆகிய தொகுதிகளுக்கு பணியாற்ற சென்று விடுகின்றனர். இதனால் தனித்து விடப்பட்ட நிலையில் தேமுதிக வேட்பாளர் சுற்றித் திரிகிறார். இதனால் வெற்றி வாய்ப்பு என்பது மதில் மேல் பூனை போல மாறி உள்ளது குடியாத்தம் தொகுதியில் என்று சொன்னால் அது மிகையல்ல.