வாக்காள வள்ளல்களாகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோகமாக வெற்றி பெறச் செய்ய வேண்டும்: பேரணாம்பட்டு பகுதியில் அதிமுக வேட்பாளர் பரிதா பிரசாரம்!

வேலூர், ஏப். 9-
குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.பரிதா புருஷோத்தமன் காலை 9
மணிக்கு ஆரம்பித்து மொரசபல்லி , லண்டன்பட்டி, நலங்காநல்லூர், காந்தி நகர், டி.டி மோட்டூர், பெரிய பள்ளம், கமலாபுரம், சிந்தகணவாய், கெளராபேட்டை ,செர்லபள்ளி,  கொண்டம்பல்லி, பங்களாமேடு, லாலாபேட்டை, கள்ளிப்பேட்டை, சாத்கர், கோட்டை காலனி ஆகிய ஊர்களில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். வேட்பாளர் பரிதா வருகையை கண்டவுடன் வாக்காளர்கள்  மலர்களை தூவி அமோக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அங்கு திரண்ட வாக்காளர்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் பரிதா: நீங்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் மறக்க மாட்டேன். அதேபோல உங்களது வாக்குகள் ஒன்று கூட மாற்று சின்னத்துக்கு போகாமல் இருக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்துக்கு உங்கள் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அளித்து
உங்கள் வேட்பாளராகிய என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன் என்று ஓட்டு வேட்டையாடினார் பரிதா. குடியாத்தம் தொகுதியில் எனது கால் தடம் படாத இடமே இருக்காது. வாக்காள வள்ளல்களாகிய உங்களை நான் நேரில் வந்து சந்தித்து உரிமையுடன் வாக்கு கேட்கிறேன் என்றார்.
பேரணாம்பட்டு ஒன்றிய கழக செயலாளர் பொகளூர் டி. பிரபாகரன் மற்றும்
கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.