வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் வேலழகனைசந்தித்து அதிமுகவில் ஐக்கியமான மாற்று கட்சியினர்!

வேலூர், ஏப். 6-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் உள்ள  தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்
அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று, அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்  த.வேலழகன் ஆலோசனையின் பேரில், அணைக்கட்டு ஒன்றிய கழகச் செயலாளர் 
சேரன் முன்னிலையில்
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் மாற்று கட்சியினர் 50 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில்  தங்களை இணைத்துக் கொண்டனர் . அவர்களுக்கு மாவட்ட செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் த. வேலழகன்
துண்டு மற்றும் வேட்டி அணிவித்து வரவேற்றார்.