நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்து, தங்கள் ரத்தத்தைச் சிந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இன்று உரிய நீதி கிடைக்காத நிலை வேதனையளிக்கிறது.
வெறும் பெயரளவிற்கும், விளம்பரத்திற்காகவும் கூட்டங்களை நடத்தும் மாவட்ட நிர்வாகம், உண்மையான வாரிசுகளின் கோரிக்கைகளுக்கு ஏன் செவிசாய்க்க மறுக்கிறது?
என்னுடைய மனு அளிக்கப்பட்டு 600 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை மேடைகளில் பேசுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாரிசுகளுக்கும் உரிய மரியாதையையும் நீதியையும் வழங்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?
லஞ்சமும் ஊழலும் நிறைந்த இந்த நிர்வாக அமைப்பில், சாதாரண மக்களுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கும் எங்கிருந்து நீதி கிடைக்கும்?
சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகள், தங்கள் உரிமைக்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?
மாவட்ட நிர்வாகமே, இனியும் காலம் தாழ்த்தாமல் எனது மனுவுக்கு உரிய பதிலையும், நியாயமான தீர்வையும் வழங்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மறக்கப்படக்கூடாது. *அவர்களின் வாரிசுகளுக்கு நீதி மறுக்கப்படக்கூடாது.’ர’











Leave a Reply