வேலூர்,நவ.3-
காட்பாடி அடுத்துள்ள பிரம்மபுரம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாகச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. பொதுமக்களும் இந்த சாலையை கடந்து செல்ல தினமும் போராட வேண்டி உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நோயாளிகள் இந்த சாலையை கடப்பது மரண வேதனையாக உள்ளது என்று புகார் கூறுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த சாலையை கடந்து செல்வது என்பது இயலாத ஒன்றாக மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல்லாங்குழி சாலையை அதாவது சல்லி சல்லியாக பெயர்ந்த சாலையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் சிரமம் இன்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனித உரிமை அமைப்பு வேலூர் மாவட்டத் தலைவர் பிரம்மபுரம் பூபாலன் மற்றும் ஜேம்ஸ், வள்ளி ஆகியோர் இந்த கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரம்மபுரத்தில் விரைந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.











Leave a Reply