வேலூர்,நவ.5-
வேலூர் நறுவீ மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனையின் மூலம் நறுவீ மருத்துவமனை தமிழ்நாட்டில் வரலாறு படைத்துள்ளது என்று மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் கூறியதாவது:
வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் இம்மருத்துவமனையின் மூலம் நடைப்பெற்று வருகிறது. இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து ஆறாவது ஆண்டு தொடங்கி உள்ளது.
இந்த கால கட்டத்தில் இம்மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
இம்மருத்துவமனையில் இருதயம், நுரையீரல், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், எலும்பு மஜ்ஜை, சிறு குடல் உள்ளிட்ட உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் 2021 ஆண்டு முதல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் வெர்ணன் லீ தலைமையில் இயங்கி வருகிறது. இங்கு நியாயமான கட்டணத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பெறும் நபர்கள் வழக்கமாக குணமடைய மூன்று மாதங்கள் ஆகும். ஆனால், இங்கு அந்த கால கட்டம் இரண்டு மாதத்திலேயே குணமடையும் நிலை உள்ளது.
மேலும் அமெரிக்க தயாரிப்பான கோரி (CORI Robot – USA) ரோபோ மூலமும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் ஒரு மாதத்திலேயே குணமடையும் நிலை உள்ளது.
இங்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நியாயமான கட்டணத்தில் செய்யப்படுவதால் இம்மருத்துவமனைக்கு வேலூர் மட்டுமல்லாது, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, அண்டை மாநிலமான ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, கடப்பா, மதனபள்ளி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இங்கு அறுவை சிகிச்சைக்காக வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகளான துபாய், ஜக்கிய அரபு அமீரகம், ஓமன், மஸ்கட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து அறுவை சிகிச்சை செய்துகொள்ள இம்மருத்துவமனைக்கு வருகை தருகின்றனர்.
இவர்களுக்கு நல்ல முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து நலமுடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதனால், இந்த துறை தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள், நோயாளிகள், ஊடக நண்பர்களின் நல் ஆதரவு காரணமாக இம்மருத்துவமனை நல்ல வளர்ச்சி அடைந்து வருவதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இம்மருத்துவமனையில் இரத்த புற்று நோய் குணமடைவதற்க்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் தொடங்கப்படவுள்ளது. அதே போன்று விரைவில் குழந்தையின்மையை போக்கும் வகையில் செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. இந்த இரண்டு மையங்களும் சர்வதேச தரத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்பதை தெரிவித்தார்.












Leave a Reply