‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ காட்பாடி பகுதியில் ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு!வேலூர், ஜூலை 16-வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் ” உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் காட்பாடி உழவர் சந்தையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.காட்பாடி உழவர் சந்தையில் தாயுள்ளத்தோடு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு தினமும் ஏற்படும் அசௌகரியங்களை உழவர் சந்தை யில் கடை வைத்துள்ள மூதாட்டி விளக்கி கூறினார். மற்றபடி உழவர் சந்தையில் எவ்விதமான குறையும் இல்லை என்று கூறினார். கழிவறைகள் மட்டும் சுத்தமான நிலையில் இல்லை என்று உழவர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நுகர்வோர் தரப்பில் ஏதாவது கருத்துக்கள் குறைகள் உள்ளனவா என்று கேட்டறிந்தார் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ். ஆட்சியருடன் மாவட்ட ஆட்சியருடன் அரசு அலுவலர்கள் உடன் வந்தனர்.

பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள விஏஓ மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?வேலூர், ஜூலை 16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார் இளங்கோ. இவர் பத்து ரூபாய் வட்டிக்கு ஆசைப்பட்டு பல கோடியை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவர் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் ஏன் சக கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் இந்த தகவல் தெரிந்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இவர் மீது துறை ரீதியாக எடுக்கவில்லை. எந்த விசாரணையும் செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சந்தேகத்துடன் பேசி வருகிறார்கள். இதைப் பற்றி யாராவது பொதுமக்கள் சென்று கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவிடம் நேரில் கேட்டால் போதும் நான் காவல்துறையில் பணிபுரிந்தவன். என்னை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று மார்தட்டி கொண்டு தைரியமாக உலா வருகிறார். இவ்வளவு நாள் தாமதம் செய்தது போதும். மாவட்ட நிர்வாகம் வீறுகொண்டு எழுந்து விஏஓ இளங்கோ மீது அந்த பல கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்று உரிய விசாரணை செய்யுமா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். விசாரணை யில் அது உண்மை என்று தெரியவந்தால் இளங்கோவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

வேலூரில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!வேலூர்,ஜூலை 15-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம் வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல், பணி சுமையை குறைத்தல் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் குழந்தைகள் முதல் ஆசிரியர்கள் வரை அவர்களின் நலனை காக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ் மாநில அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

செய்யாறில் விடுதலை போராட்ட மாமன்னர் அழகு முத்துக்கோனின்குரு பூஜை விழா கோலாகலம்:அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பு !செய்யாறு, ஜூலை 15 -தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட ‘மாமன்னர் அழகுமுத்துக்கோனின்’ 269வது பிறந்தநாளையொட்டி, செய்யாறில் குருபூஜை விழா கோலாகலமாக நடந்தது. அரசியல் கட்சியினர், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு மாமன்னரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவர் மாமன்னர் அழகு முத்துக்கோன். இவர் கடந்த ‘200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னோடி மாமன்னராகத் திகழ்ந்தவர்.இவரது 269வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது. செய்யாறு யாதவர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் ராஜா ஆகியோர் விழாவுக்கு தலைமை தாங்கி, மாமன்னர் அழகு முத்துக்கோனுக்கு இங்குள்ள இந்திரா காந்தி சிலை அருகே 269வது குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இங்கு நிறுவப்பட்டிருந்த மாமன்னரின் திருவுருவப் படத்திற்கு, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், பொறுப்பாளர்கள் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னதாக யாதவர் சங்க பொருளாளர் அஜித்குமார், ஒருங்கிணைப்பாளர்களான கோபால், சுதாகர் ஆகியோர் அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்றனர். விழாவில் செய்யாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகள், பண முடிப்பு ஆகியவற்றை விழாக் குழு சார்பில் கௌரவித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.