ஆணழகன் போட்டியில் மிஸ்டர் காட்பாடியாக பட்டம் வென்றவர் இன்று அல்லல்படும் அவலம்: தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளுமா?வேலூர், ஜூலை 14-வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 1997ல் காட்பாடி ரயில்வே இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடந்த தமிழ்நாடு அளவிலான வேலூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் முனுசாமி வெற்றி பெற்று ‘மிஸ்டர் காட்பாடி’ என்று பட்டம் வென்றார். ஆனால் இவருக்கு தமிழ்நாடு அரசு எவ்விதமான உதவியும் செய்யவில்லை. விளையாட்டு வீரர் கோட்டாவில் இவருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் காட்பாடி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்ய பயிற்சி அளித்து வருகிறார். உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் முனுசாமி. ஆனால் சரியான வேலையின்றி குடும்பம் நடத்த சிரமமாக நாளை கழித்து வருகிறார். இளைஞர்கள் நல்வழியில் நடக்க போதை இல்லாத வாழ்க்கை முறையை வாழ தகுந்த அறிவுரைகள் வழங்கி தொண்டு செய்து வருகிறார். அத்துடன் சமூக ஆர்வலராகவும் பொதுமக்களுக்கு தொண்டாற்றி சேவை செய்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு அரசு வாழ்வாதாரம் சிறக்க ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. தமிழ்நாடு அரசு முனுசாமிக்கு ஏதாவது முன் வந்து உதவிபுரியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்து மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் உயர்த்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோவை வடக்கு மாவட்ட தலைவர் எஸ். எம் .அய்யூப் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுகூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .எதிர் வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனையும் நடைபெற்றது..

ஸ்ரீ பாலமுருகன் டிரேடர்ஸ் திறப்பு விழா: முதியோர்களுக்கு உணவு வழங்கி உபசரிப்பு!வேலூர், ஜூலை 13-வேலூர் அடுத்த பொய்கையில் உள்ள முதியோர் இல்லத்தில் (மோட்டூரில்) புதியதாக தொடங்கியுள்ள ஸ்ரீ பாலமுருகன் டிரேடர்ஸ் கடை திறப்பு விழாவை முன்னிட்டு முதியோர்களுக்கு காலை உணவை தனது திருக் கரங்களால் வேலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வினோத் கண்ணன் வழங்கி நெகிழ்ச்சி அடைந்தார். இந்த உணவை உட்கொண்ட முதியோர் நாங்கள் அனைவரும் வீட்டில் எங்களது உறவினர்களுடன் அமர்ந்து உண்ட ஆத்ம திருப்தி தங்களுக்கு கிடைத்தது போன்று உள்ளது என்று உளப்பூர்வமாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எளிய நிகழ்ச்சியில் எம். எல். ஏ.,வுடன் பாலமுருகன் டிரேடர்ஸ் உரிமையாளர்கள் கேப்டன் சிவக்குமார், ரீனா சிவக்குமார், சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்யாறில் உதவும் கரங்கள் -அகர்வால் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் !செய்யாறு, ஜூலை 13 -செய்யாறு உதவும் கரங்களும் – நவலடி நிதி நிறுவனம் – சென்னை அகர்வால் மருத்துவமனையும் இணைந்து, ஏழை – எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.செய்யாறில் உதவும் கரங்கள் என்ற அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமையில் ஏழை – எளிய மக்கள் பயன் பெறும் வகையில் கண், காது – மூக்கு – தொண்டை, இதயம், பொதுமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகிறது. இதுதவிர, இந்த அமைப்பு மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் ‘இருக்கும் இடம் தேடி’ தினமும் உணவு வழங்கி வருகிறது. இந்த செயல் செய்யாறு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று முன் 2ம் சனிக்கிழமை செய்யாறு கோபால் தெருவில், செய்யாறு உதவும் கரங்கள் – நவலடி நிதி நிறுவனம் – ஸ்ரீ பரணி பைனான்ஸ் மற்றும் சென்னை அகர்வால் மருத்துவமனை ஆகியவை ஒன்றிணைந்து பொது மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.முகாமை செய்யாறு உதவும் கரங்கள் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான ஆதிகேசவன் தொடங்கி வைத்தார். தலைவர் ரவிபாலன், செயலாளர் சண்முகம், பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.300க்கும் மேற்பட்ட செய்யாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அகர்வால் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த மேல் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் செய்யாறு உதவும் கரங்கள் ஏற்கின்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாம் ஏழை – எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு ரூ.40 லட்சம் ஏமாற்றிய அணைக்கட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கோட்டி(எ) கோவேந்தன் கைது!வேலூர்,ஜூலை12-வேலூர் குட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா (48). இவர் தனது சொத்து பிரச்சனையை தீர்த்து வைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு மாவட்ட செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் மற்றும் சந்தோஷ் ஆகியோரிடம் ரூபாய் 40 லட்சம் ரொக்கப் பணத்தை வழங்கியுள்ளார். இதை வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறி ரூ. 40 லட்சத்தை திருப்பித் தராமல் ஷீலாவை அலை கழித்து உள்ளனர். அத்துடன் பணத்தை திருப்பித் தராமல் இருவரும் சேர்ந்து ஷீலாவை ஏமாற்றி இழுத்தடித்து உள்ளனர். இது குறித்து பலமுறை பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு கேட்டு ஓய்ந்து போன ஷீலா பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு மாவட்ட செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புக்கு களப்பணியாளர்களுக்கு ஆட்சியர் தலைமையில் பயிற்சி!வேலூர், ஜூலை 12-வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் பயிற்சி மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் அளிக்கப்பட்டது. களப்பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி கையடக்க கணினிகளை வழங்கி, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தரவுகளை முழுமையாகவும், துல்லியமாகவும் சேகரித்து அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளை விரைவாகச் சென்றடைய உறுதுணையாக செயல்படுமாறு அறிவுறுத்தி பயிற்சி வழங்கினார். இந்நிகழ்வில் மாநில திட்ட மேலாளர் (பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு) எஸ். ராஜராஜன், மாநில திட்ட மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) ஆர். சௌந்தர் ராஜன், மாநில திட்ட அலுவலர் (சமுதாய மறுவாழ்வு சேவை) எஸ். அரவிந்த் பரத்வாஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச. பாபு, இளநிலை பதிவு அலுவலர் (JRO) இனியன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்னர்.