தவெகா சர்க்காரின் விஜிலென்ஸ் போலீசாரால் திமுக இரண்டாம் கட்ட தலைவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கை தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஆடிப் போக செய்துள்ளது.

தமிழ்நாட்டின் மாஜி நெடுஞ்சாலைத்துறை மந்திரி எ.வ.வேலுவுக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் (DVAC) எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் சூறாவளியைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, வார இறுதி விடுமுறை நாட்களைக் கணக்கிட்டு எ.வ.வேலுவை உடனடியாகக் கைது செய்ய வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் திமுக வட்டாரத்தை உலுக்கியுள்ளது. ஆனால், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) இந்த அதிரடி ஆட்டம் இதோடு நின்றுவிடப் போவதில்லை என்றும், இதன் அடுத்த அலை மிக வீரியமாக இருக்கப்போகிறது என்றும் கோட்டை வட்டாரத் தகவல்கள் கசிகின்றன.
தமிழ்நாடு முதல்வரும், த.வெ.க தலைவருமான ச. ஜோசப் விஜய்யின் அடுத்த இலக்கு, திமுகவின் மிக முக்கியத் தூணாகவும், மாஜி துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய வட்டாரம் மற்றும் அவரது நண்பர்கள் தான் என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோட்டையில் இருந்து கசியும் நம்பத்தகுந்த தகவல்களின்படி, உதயநிதி ஸ்டாலினுடன் மிக நெருக்கமாகப் பழகிய, அவரது தொழில் மற்றும் தனிப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களின் முழு விவரங்களையும், கடந்த கால செயல்பாடுகளையும் தற்போதைய அரசு மிகத் தீவிரமாகத் திரட்டி வருகிறது. உதயநிதியின் நெருங்கிய நண்பர்கள், கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் பின்னணியில் இருந்து முக்கிய முடிவுகளை எடுத்ததாகக் கூறப்படும் ஆலோசகர்கள் மற்றும் திரைத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்ந்த முக்கியப் புள்ளிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ‘டாப் சீக்ரெட்’ பட்டியலை முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான சர்க்காரின் உளவுத்துறை தயார் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை போன்றவற்றில் நடைபெற்ற டெண்டர்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் உதயநிதிக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்குக் கிடைத்த சலுகைகள் ஆகியவற்றை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் மற்றும் மாநிலப் புலனாய்வு அமைப்புகள் ஏற்கனவே துடைப்பம் கொண்டு தூசி தட்ட ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆளுங்கட்சித் தரப்பில் விசாரித்தபோது, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று திட்டவட்டமாக மறுக்கிறார்கள். “கடந்த ஆட்சியில் மக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள், அதிகார பலத்தைக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து திமுக மாஜி நெடுஞ்சாலைத்துறை மந்திரி எ.வ.வேலுவின் மீதான நடவடிக்கை ஒரு ஆரம்பம் தான். அடுத்தடுத்து முறைகேடுகளில் தொடர்புடைய அனைவரின் முகமூடிகளும் கிழிக்கப்படும்,” என்று தவெக சர்க்கார் தரப்பு மிக உறுதியாகத் தெரிவிக்கிறது.
குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினின் நண்பர்கள் வசம் இருந்த சில முக்கியத் தொழில்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் வாங்கிய சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் சேகரித்து வருவதாகத் தெரிகிறது. எ.வ.வேலுவின் மீதான நடவடிக்கை முடிவுக்கு வந்ததும், அடுத்த சில வாரங்களில் உதயநிதியின் இந்த ‘இன்னர் சர்க்கிள்’ மீதான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் பாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தரப்போ, தற்போதைய தவெக தலைவர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான சர்க்காரின் இந்த அடுத்தடுத்த அதிரடி பாய்ச்சல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. ஏற்கனவே எ.வ.வேலு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து, சட்ட ரீதியாகச் சந்திப்போம் என்று சவால் விடுத்துள்ளார். தற்போது, உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களைக் குறிவைத்து நகர்வுகள் நடப்பதை உணர்ந்துள்ள திமுக தலைமை, தனது சட்டக் குழுவை உஷார்படுத்தியுள்ளது.
அரசியல் ரீதியாக புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் பிடி இறுகுவது, வரும் காலங்களில் தமிழ்நாடு அரசியலில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஒரு மிகப்பெரிய மோதல் போக்கை உருவாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இதனைத் தொடர்ந்து, எ.வ. வேலுவுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 20 இடங்களில் நேற்று ஒரே நாளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திமுக சட்டப்பேரவைக் கொறாடா எ.வ. வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை முதலே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் சோதனையில் ஈடுபட்டனர் சென்னை ஆழ்வார்பேட்டை வீடு, திருவண்ணாமலை வீடு மற்றும் கரூரில் அரசு ஒப்பந்ததார்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் திருப்பூர் அரசு அதிகாரிகளின் வீடு உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரால் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் ஜெயராம் வெங்கடேசன், அறப்போர் இயக்கம், சென்னை அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் மீதும் மற்றும் 9 மாநில அரசு ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மற்றும் ஒரு ஒப்பந்தகாரர் (தனி நபர்) மீதும் வழக்குப் பதியப்பட்டது.
அந்த வழக்கானது 2022 ஆம் ஆண்டு அரசு சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பயண தரத்தை மேம்படுத்துதல் மற்றும் குறுக்கு வடிகால் அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 2022ம் ஆண்டில் குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக கூறுப்பட்ட குற்றச்சாட்டாகும். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பராமரிப்பு(TPR-007) உட்பிரிவு மற்றும் பிற இடங்களுக்கான பணிகள் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
இதில் எந்தவொரு பணியும் மேற்கொள்ளப்படாத நிலையில், மார்ச் 25 மற்றும் மார்ச் 28 ஆகிய தேதிகளில் ரூ.3.23 கோடி மேற்படி சங்கரானந்த் இன்பரா நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு பணம் ரூ.3.23 கோடி மோசடி மற்றும் குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மொத்தம் 20 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன, அவைகள் சென்னையில் 4 இடங்களிலும், திருவண்ணாமலையில் 4 இடங்களிலும், கரூரில் 7 இடங்களிலும், திண்டுக்கல்லில் 2 இடங்களிலும், கோயமுத்தூரில் 2 இடங்களிலும், திருப்பூரில் 1 இடத்திலும் நடத்தப்பட்டன.
இந்த சோதனையில் மாஜி மந்திரி எ.வ. வேலு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மற்றும் ஒப்பந்தகாரரின் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்டன. வழக்கு விசாரணையில் உள்ளது.
தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என எ.வ. வேலு குற்றம்சாட்டியுள்ளார். முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பியதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் தாம் நிரபராதி என்பதை நிரூபிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏவுமான எ.வ வேலு தொடர்பான 20 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரால் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை இந்த சோதனை நடந்தது. இதில் ரூ.40 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த எ.வ வேலு கூறியதாவது:-
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதை எதிர்த்து கேள்வி கேட்டேன். சட்டப்பேரவையில் நான் கேட்ட கேள்வியின் அடிப்படையில்தான் கரூரில் எங்கோ ஒரு அலுவலகத்தில் சம்பதப்பட்ட குற்றச்சாட்டை மையப்படுத்தி என் வீட்டிற்கு ரெய்டு வந்து இருக்கிறார்கள். எனது சொந்த கிராமத்தில் இல்லம் உள்ளது.
ஆனால், திருவண்ணாமலை கல்லூரிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். இப்போது வரை ஆய்வு நடத்தி கொண்டு இருக்கிறார்கள். அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். இப்படியெல்லாம் செய்தால் நாங்கள் பயந்துவிடுவோம் என்று அர்த்தம் இல்லை. நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம். நீங்கள் வழக்கு தொடரலாம். ரெய்டு நடத்தலாம் நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறது.
கடைசியாக நமக்கு இருக்கும் நம்பிக்கை நீதிமன்றம்தான். நீதிமன்றத்தில் நான் நிரபராதி என நிரூபிப்பேன் நான் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பரிசுத்தமானவன். ஒரு பொய்யை பலமுறை சொல்வதாலேயே அது உண்மையாகிவிட முடியாது. நீதிமன்றத்திற்கு செல்வேன். நிரபராதி என்று காட்டுவேன். நான் திரும்பவும் சொல்கிறேன். எங்கள் தலைவர் ஸ்டாலின் மிசாவில் ஓராண்டு காலம் இருந்தார்.
அற்புதமான அரசை நடத்தி காட்டியிருக்கிறார். அதனால், எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நீதிமன்றத்தில் சந்திப்பேன். 40 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்து இருப்பதாக கூறுவது பொய்யான தகவல். என்னுடைய வீட்டிலோ.. என்னுடைய கிராமத்தில் உள்ள வீட்டிலோ ஒரு பைசா பணமும் எடுக்கவில்லை. என்னுடைய அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்து சென்று இருக்கிறார்கள்.
கம்ப்யூட்டரில் எனது சுற்றுப்பயண பட்டியல், அறிக்கைகள் ஆகியவை தவிர வேறு எதுவும் இல்லை. கரூரில் சாலை போடப்பட்டது. அதற்காக பில் போடப்பட்டது. அங்கு தவறு நடந்துள்ளது. அந்த ஒப்பந்தராரருக்கு மந்திரி நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி செய்தார் என்றுதான் முதல் தகவல் அறிக்கையில் போடப்பட்டுள்ளது. அங்கே வந்து டெண்டர் நடத்த வேண்டும் என்றால் கோட்டப் பொறியாளர்தான் நடத்துவார்.
அதற்குரிய ஆவணங்கள் எல்லாம் அங்கேதான் இருக்குமே தவிர மந்திரி இல்லத்திலோ.. அலுவலகத்திலோ இருக்காது. டெண்டர் விடும் அதிகாரிகளின் அலுவலகத்திதான் ஆவணம் இருக்கும். என்னுடைய இல்லத்தில் இந்த ஆவணங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. அதிகாரத்தின் உச்சத்தில் என்னை டார்கெட் செய்கிறார்கள். கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. எதிர்க்கட்சி என்றால் கேள்வி கேட்கத்தான் வந்து இருக்கிறோம்.
கேள்வி கேட்கத்தான் செய்வோம். ஆதாரத்துடன் குற்றச்சாட்டு சொல்லுங்கள் என்று கேட்டதில் என்ன தவறு உள்ளது. நான் 7 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன். எவ்வளவு அனுபவம் இருக்கும். நான் எவ்வளவு போராட்டம் நடத்தியிருக்கிறேன். புதுசா பதவிக்கு வந்து இருக்கிறார் என்பதற்காக நாங்கள் எழுந்து கேள்வி கேட்டதற்காக இப்படி ஒரு சோதனை.. அதிகாரத்தின் உச்சம் இப்படி ஒரு சோதனை நடைபெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.










Leave a Reply