
வேலூரில் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!வேலூர், ஜூன் 27-வேலூர் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை வேலூர் வடக்கு காவல் நிலையத்தின் முன்பாக சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகில் மூன்று நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள முஸ்லிம் வாலிபர்களுக்கும், கன்சால்பேட்டையில் உள்ள முஸ்லிம் வாலிபருக்கும் இரவு சுமார் 10 மணிக்கு முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் சரமாரியாக கத்தியால் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் காவல் துறையினர் ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இன்னொரு தரப்பினருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு முன்பாக கன்சால்பேட்டையைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபர்களும், பெண்களும் சேர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் வாகனத்தை சிறைபிடித்து ஒரு தலைப்பட்சமாக காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று முஸ்லிம் பெண்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை பார்த்து முறையிட்டு கூச்சலிட்டனர்.அதற்கு மாவட்ட ஆட்சியர் சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலந்து சென்றனர்.










Leave a Reply