காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனால் அவமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்!வேலூர், ஏப். 2-வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் சில கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏறி நின்று கொண்டு சென்றனர். இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்பும் அந்த வாகனத்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். இதை பார்த்ததும் ஆவேசமடைந்த திமுக வேட்பாளர் துரைமுருகன் எங்கே ஏறுகிறாய் இறங்கு என்று அவரை அவமரியாதை செய்து அந்த பிரச்சார வாகனத்தில் இருந்து இறக்கி விட்டார் .இதனை பார்த்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தனர். ஆனாலும் கூட்டணி தர்மத்தை தேர்தல் நேரத்தின் போது வெடிக்கச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அந்த பிரச்சாரக் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அரசியல் நோக்கர்களும், நடுநிலையாளர்களும் பொதுமக்களும் பேசும்படியாக நிலைமை மாறியது குறிப்பிடத்தக்கது. ஏன் திமுக வேட்பாளர் துரைமுருகன் இப்படி அநாகரீகமாக பொதுவெளியில் நடந்து கொண்டார் என்பது யாருக்கும் புரியவில்லை. இது என்ன கூட்டணி ரகசியம் என்பதும், சிதம்பர ரகசியம் என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம். இதை திமுக தலைமையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையும் நன்கு பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று அரசியல் நோக்கர்களும், வாக்காளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கு எந்த கட்சி உரிய விளக்கத்தை பொதுமக்களுக்கு தரும் என்பதும் புரியாத புதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பணி ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி காசாளர் தினகரனுக்கு சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பினர் பாராட்டுவேலூர், ஏப். 1-சிவில் ஓய்வூதியம் பெறுவோர் கூட்டமைப்பின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செங்காடு இந்தியன் வங்கியின் காசாளராக 26 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற அ.தினகரனுக்கு பாராட்டு விழா வங்கி கிளை வளாகத்தில் நடைபெற்றது.இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் விகாஸ் சோப்ரா தலைமை தாங்கினார். உதவி மேலாளர் போஸ் சந்திரகாந்த் வரவேற்றுப் பேசினார்.வங்கி அலுவலர்கள் ரஞ்சித்குமார், வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கியின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர். சிவில் ஓய்வூதியர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பிலும் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் பொன்னாடை போர்த்தி பாராட்டி பேசினார்.ஓய்வு பெற்ற சார் பதிவாளர் க.சக்கரவர்த்தி, சென்னை ச.கோபாலகிருஷ்ணன், ஆற்காடு ஜி.கணேஷ், நகை மதிப்பீட்டாளர் ராஜி, தினேஷ், குப்புலட்சுமி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பலராமன், ஞானசௌந்தரி, நிர்மலா, விஜயன் வங்கியில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் உள்ளூர் வாடிக்கையாளர்களும் பங்கேற்று ஓய்வு பெற்ற வங்கி கிளையின் காசாளர் அ.தினகரனுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்தனர்.முடிவில் வங்கியின் காசாளர் அ.தினகரன் ஏற்புரையாற்றினார். அன்னாரின் துணைவியார் திலகம் நன்றி கூறினார்.