Archives
August 2026
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
ஸ்ரீ விஸ்வரூப சாஸ்தா சித்தர் பீடத்தின் பீடாதிபதியின் 47 வது ஜெயந்தி விழா!
சிறை அதிகாரிகள் கவனமாக பணியாற்ற வேண்டும்: சிறைத் துறை தலைவர் சங்கர்!வேலூர், ஏப். 21-சிறை அதிகாரிகள் சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள், செல்போன், போதை பொருட்களை கொண்டு செல்ல துணை போய் வேலையை இழக்காதீர்கள் என -சிறைத்துறை தலைவர் சங்கர் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசினார்.வேலூர் மாவட்டம்,தொரப்பாடியில் உள்ள சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தில் சிறைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி நிறைவு விழாவும், பட்டமளிப்பு விழாவும் நடந்தது.இதில் தமிழகத்தின் சிறைத்துறை மற்றும் சீர்திருத்த நிர்வாக துறையின் டிஜிபி சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.இதில் கர்நாடக, தமிழ்நாடு, நாகாலாந்து, மத்திய பிரதேசம், கேரளம், டில்லி, ஆந்திரா ஆகிய மாநில சிறை அதிகாரிகளுக்கு பட்டங்களும், சான்றுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டது.3 மாத பயிற்சி மற்றும் 9 மாதங்கள் பயிற்சியை அதிகாரிகள் நிறைவு செய்தனர். இந்த விழாவில் சிறை சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இயக்குநர் பிரதீப், பேராசிரியர் ஃப்யூலா, இணை இயக்குநர் கோவிந்தராஜன் உள்ளிட்டோரும் மற்றும் சிறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்இவ்விழாவில் தமிழகத்தின் சிறைத்துறை மற்றும் சீர்திருத்த நிர்வாக துறையின் டிஜிபி சங்கர் பேசுகையில், நாம் ஆங்கிலேயர் கால சிறை சட்டங்களை சீர் திருத்தம் செய்துள்ளோம்.சீர் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் நம்முடைய மனநிலையை மாற்ற வேண்டும். அதனை மாற்றுவது முக்கியம். நாம் நிச்சயம் அதனை மாற்றுவோம். அடக்குமுறை மனப்பான்மை மாறி சிறையில் சீர்திருத்தம் செய்வோம்.ஒரு சிறை வாசி திருந்தி நல்ல வாழ்க்கை முறைக்கு போனால் அது சிறை நிர்வாகத்தின் வெற்றி.மாறாக அதே சிறைவாசி கடுமையான குற்றவாளியாக வந்தால் அது சிறை நிர்வாகத்தின் தோல்வி.சிறை அதிகாரிகள் எதற்காக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். உயரதிகாரிகள் பிடிக்காததால் அல்ல, அவர்கள் மீது கம்பீரமான குற்றச்சாட்டுகள் உள்ளது.அதற்கு அந்த அதிகாரியே தான் காரணம்.இது நம் பணிக்காலம் முழுவதும் நமது காதில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். என்ன குற்றச்சாட்டு அதிகாரிகள் மீது என்றால் கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை உள்ளே அனுமதித்தார்.சிறை கைதிகளுக்கு வசதி செய்து தர பணம் வாங்கினார். இது எல்லாம் பொதுவான குற்றச்சாட்டுகள்.இதற்கெல்லாம் அந்த அதிகாரி தான் காரணம். ஆனால் எனக்கு குடும்பம் இருக்கிறது. குழந்தையில்லை. எப்படியாவது மீண்டும் பணியில் சேருங்கள் என கெஞ்சுகிறார்கள்.அவர்கள் எல்லாம் இங்கு பயிற்சியை முடித்து வந்தவர்களாக இருப்பார்கள், ஆகவே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.அரசின் நல்ல விதிகள் சட்டங்கள் இருக்கிறது. ஆனால் பிரச்சணை எப்படி வருகிறது என்றால் அந்த விதிகள் சட்டங்கள் மீறி நீங்கள் (அதிகாரிகள்) செயல்பட கூடாது.தொழில் விதிகளை பின்பற்ற வேண்டும். வேலைக்கு நேர் எதிரான விஷயத்தை செய்ய கூடாது.சிறையினுள் போதை பொருட்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ, செல்போனையோ கொண்டு செல்ல அனுமதிப்பதை அதிகாரிகள் நீங்கள் செய்ய கூடாது என அவர் பேசினார்.
தேர்தலுக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கமாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஜாக்டா ஜியோ கோரிக்கை!வேலூர், ஏப். 21-தேர்தல் பணியில் மாவட்டம் ஆகும் முழுவதும் ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர். எனவே தேர்தல் நடைபெறும் நாளுக்கு அடுத்த நாள் 24.04.2026 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்க கோரி வேலூர் மாவட்ட ஜாக்டா ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் வருகை தந்தனர். மாவட்ட ஆட்சியர் முகாம் சென்றிருப்பதால் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் வி.ரமேஷை யமுனை சந்தித்து கோரிக்கை மனுவை ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் அளித்தனர். மேலும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.ஜாக்டா ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டி.டி.ஜோஷி, ஜி.சீனிவாசன், ஆ.ஜோசப்அன்னையா மற்றும் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயக்குமார், ஜி.டி.பாபு, எம்.எஸ்.செல்வகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், மகளிர் துணைக்குழு தலைவர் ச.ஜோதி, முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், வேலூர் வடக்கு வட்ட கிளை தலைவர் எஸ்.சபரிகிரிவாசன், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக வேலூர் கல்வி மாவட்ட தலைவர் வி.திருக்குமரன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.1.தேர்தல் பணியில் மாவட்ட முழுவதும் ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர். எனவே தேர்தல் நடைபெறும் நாளுக்கு அடுத்த நாள் 24.04.2026 அன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்க அறிவிக்க கோருகின்றோம்.2.16.04.2026 முதல் பள்ளி மாணவர்களுக்கு கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் மட்டும் பள்ளி பணிகளுக்காக 25.04.2026 வரை வருகை தர பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.3.16வது சட்டமன்ற தேர்தல் 06.04.2024 செவ்வாய்கிழமை நடைபெற்ற போது அதற்கு அடுத்த நாள் 07.04.2024 புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக அன்றைய வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் திருமிகு.அ.சண்முகசுந்தரம் அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கயினை ஏற்று அறிவித்துள்ளார்கள்.4.தேர்தல் பணியில் மாவட்ட முழுவதும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டனர். தேர்தல் நடைமுறைகள் மற்றம் விதிகளுக்கு உட்பட்டு உடல் நலகுறைபாடு காரணமாக பணிசெய்ய இயலாத நிலையில் விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலக்கு வழங்கிட கோருகின்றோம்.5.சட்டமன்ற தொகுதி மாறி பணி செய்ய பணிக்கப்பட்டுள்ள பலருக்கு தபால் வாக்குகள் இன்னமும் வழங்கப்படாத நிலை உள்ளது. தாங்களும் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு தபால் வாக்குகள் வழங்கிட ஜாக்டா ஜியோ பேராமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
பேரணாம்பட்டு நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்: குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா பிரச்சாரம்!
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்!வேலூர், ஏப்.21-வேலூர் மாவட்டம், குடியாத்தம் தட்டப்பாறை பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்கப்படுவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தீவனப் பயிர்களுக்கு நடுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 275 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஹரிதாஸ் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்யாறு அ.தி.மு.க.,வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியத்துக்கு10வது வார்டில் பட்டாசு வெடித்து பிரம்மாண்ட வரவேற்பு !
துரை முருகன் காட்பாடியின் கதாநாயகன் ராமு!வேலூர், ஏப. 20-காட்பாடி யார் என்றாலே துரைமுருகனைச் சொல்வார்கள். திமுகவின் பொதுச் செயலாளரும் சீனியர் எம்எல்ஏவுமான துரைமுருகன் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், இந்தியாவிலே நீண்ட காலம் எம்.எல்.ஏவாக இருந்த இந்த பெயரை பெற்று விடுவார் என்பதால் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த போராடுகிறார். ஆனால் இவருக்கு எதிராக கடந்த கடந்த முறை போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்ற ராமு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார். துரைமுருகனை வீழ்த்தினேன் என்ற பெருமையை பெற்றுவிட ராமு கடும் போட்டியை அளித்து வருகிறார்.
சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஏப்.20-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஏப்ரல் மாத (சித்திரை) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அற்புத சுகமளிக்கும்கோவை / திருப்பூர்பேரின்பப் பெருவிழா -2026
அணைக்கட்டின் அரசன் வேலழகன்!வேலூர், ஏப். 20-அணைக்கட்டின் அரசனாக அதிமுக வேட்பாளர் வேலழகன் முடி சூடுவார் என்று மக்கள் கருதுகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிக முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது.தற்போதைய எம்.எல்.ஏ: திமுகவின் ஏ.பி. நந்தகுமார் மீண்டும் போட்டியிடுகிறார்.இவர் கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த வளர்ச்சித் திட்டங்களைக் கூறி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற அவர் முனைப்பு காட்டுகிறார்.அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகியவற்றுடன் இணைந்து பலமான கூட்டணியை அமைத்துள்ளது. இத்தொகுதியில் அதிமுகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், திமுகவிற்கு கடும் சவாலாக விளங்குகின்றனர்.அதிமுக சார்பில் டி. வேலழகன்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர். வேல்முருகன்,நாம் தமிழர் கட்சி சார்பில் எம். ரவிக்குமார், வி.எஸ். வெங்கடேஷ்,ஆர். சரவணன், புதிய தமிழகம் மற்றும் பல வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.பத்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஏ.பி.நந்தகுமார் விளம்பர அரசியலை செய்ததாகவும், சமூக ஊடகங்களில் மட்டுமே தன்னை முன்னிறுத்திக் கொண்டு பயணித்ததாகவும் கூறி மக்கள் குமுறுகின்றனர். ஒருமுறை வென்றால் மறுமுறை அரசியல் வாய்ப்பை இழப்பார் என்றும் இரு முறை வென்றாலும் தேர்தல் களத்திலே காணாமல் போய்விடுவார் என்றும் அணைக்கட்டு தொகுதிக்கு ஒரு ராசி உண்டு. இந்த ராசி எல்லாம் பொய்யாக்கி, ஏ. பி. என். இளஞ்சிங்கம், இளம்புயல் என்றெல்லாம் அடைமொழியோடு வலம் வரும் ஏ. பி. நந்தகுமார் மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆகிய இடம் என்ற கனவோடு ‘வைட்டமின் ப’ இரைத்து விடுகிறார். இதையெல்லாம் அறிந்து கொண்ட வேல்அழகன் அதற்கேற்றவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு ரித்திஷ், வெங்கடேஷ் என்ற ஐ. டி. ஐடி விங் நிர்வாகி தலைமையில் தனி அணியை அமைத்து ஏ.பி.என்னுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.இதே நேரத்தில் வேலழகனும், தனது தந்தை தர்மலிங்கம் எம்எல்ஏ ஆகவும், மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும் இருந்தபோது அணைக்கட்டு தொகுதிக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பிரசாரம் செய்து வருகிறார்.அணைக்கட்டு ஒன்றியச் சேர்மனை தேசியக்கொடி ஏற்ற விடாமல் தானே எம்எல்ஏ நந்தகுமார் தானே ஏற்றி வருவதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன் வேலூர் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தது அணைக்கட்டு தொகுதி முழுவதும் ஏ.பி.நந்தகுமாருக்கு ஒரு எதிர்ப்பலையை வீசி உள்ளது.மூன்றாவது முறை வெற்றி பெற்றால் அமைச்சர் என்ற கனவோடு அதிமுக கொடுத்ததை விட இரு மடங்கு அதிகமாக அள்ளிக் கொடுத்தாலும் நடிப்பு அரசன் நந்தகுமாரின் நடிப்பை மக்கள் ஏற்க தயாராகவில்லை என்பது நிதர்சன உண்மை. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக வேட்பாளருக்கு பணி புரிந்து கொண்டுள்ளது ஒரு கட்சி.அணைக்கட்டின் அரசன் ஆகிறார் வேலழகன். அங்கு இந்த முறை போர்க்களத்தில் விழப் போகிறார் நந்தகுமார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால் உண்மை என்னவோ மே நாலாம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.
1
…
47
48
49
…
128
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.