காட்பாடி தொகுதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியின் வேட்பாளர் அந்தக் கட்சியின் முன்னணி பொதுச் செயலாளர் துரைமுருகன் என்றால் கேட்கவா வேண்டும்.
துரைமுருகன் (திமுக): திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் 13-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
1971 முதல் பலமுறை வெற்றி பெற்றுள்ள இவர், தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்கத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
அதிமுக சார்பில் வி. ராமு களம் இறங்கியுள்ளார். 2021 தேர்தலில் துரைமுருகன் கடும் நெருக்கடியை கொடுத்தார் ராமு. இதனால் துரைமுருகன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (746 வாக்குகள்) மட்டுமே வெற்றி பெற்றார். இந்த முறை அந்த வெற்றியைத் தட்டிப்பறிக்க அதிமுக கடும் சவால் அளித்து வருகிறது.
துரைமுருகனின் குடும்பத்தினர் (மருமகள் சங்கீதா கதிர் ஆனந்த் உட்பட) தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழகம், சக்கரை ஆலை, தொகுதியில் நிறைவேற்றியுள்ள பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டு போடும் துரைமுருகன் பிரசாரத்தை மக்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். ஆனாலும் காட்பாடி தொகுதியில் தீர்க்க முடியாத போக்குவரத்து நெரிசல் அவருக்கு ஒரு மைனஸ் பாயிண்ட்.
குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்றத்தின் 15 ஆண்டுகால தலைவராக இருந்த வி. ராமு இன்ஜினியரிங் படித்தவர். கடந்த முறை கடும் போட்டி அளித்த இவர் வெற்றி வாய்ப்பை இழந்தவுடன் தொகுதியிலே குடிபுகுந்து விட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி நிகழ்ச்சிகள், சுக, துக்க நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழையா விருந்தாளியாக சென்று மக்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
காட்பாடி தொகுதியின் அலுவலகத்தில் நிலை என்ன?, மக்களின் குறைபாடுகள், என் கேள்விக்கென்ன பதில் என்று சமூக வலைதளங்களில் பிரசாரத்திலும் ராமு கேட்கும் பதிலுக்கு திமுகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.
இந்திய அரசியல் வட்டாரத்திலும், தமிழக சட்டப்பேரவையும் பொதுக்கூட்டத்திலும் அரசியல் நிகழ்வுகளும் துரைமுருகனின் நையாண்டி பேச்சுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. அப்படி சிறப்பு மிக்க துரைமுருகன் இன்று காட்பாடி தொகுதியில் ராமு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திணற முடிகிறது என்பதை மட்டும் அறிய முடிகிறது.
இது மட்டுமல்ல பக்கத்து தொகுதிக்கு கூட அவர் வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்திற்கோ பிரசாரத்துக்கோ செல்ல முடியாத அளவுக்கு தன்னுடைய தொகுதியிலேயே துரைமுருகன் முகாம் விட்டுவிட்டார். தனது குடும்பத்தினருடைய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலை காட்பாடி தொகுதியிலும் சரி கே.வி. குப்பம் தொகுதியிலும் சரி இரண்டிலுமே வெற்றி பெற்று விட வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கதிர் ஆனந்த் எம்பி ‘வைட்டமின் ப’வை அள்ளி விடுகிறார்.


நடிகர் விஜய் கட்சியின் த வெகா வேட்பாளர் டாக்டர் சுதாக
ர், நாம் தமிழர் கட்சி திருமுருகன், சசிகலா கட்சி வேட்பாளர் சந்திரன் போன்ற வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள் கணிசமாக இருக்கும்.
திமுக தனது கோட்டையைத் தக்கவைக்குமா அல்லது அதிமுக இம்முறை வீழ்த்துமா என்பதே தமிழ்நாடு முழுவதும் அரசியல் ஆர்வலர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
துரைமுருகனை தொகுதி விட்டு வெளியே வராமல் செய்துவிட்ட கதாநாயகனாகிவிட்டார்.
இப்போதைக்கு நாட்டின் பொன்விழா கண்ட எம் எல் ஏ என்ற பெருமைக்குரிய கலைஞர் கருணாநிதியை விட சாதனை படைக்க நினைக்கும் துரைமுருகனின் முயற்சியை திமுகவின் முக்கிய நிர்வாகிகளே ரசிக்கவில்லை என்பதை தேர்தல் களத்தில் காண முடிகிறது.
காட்பாடி டு கோட்டை செல்லப் போவது யார் என்ற கேள்விக்கு பதில் இன்னும் சொல்லவா வேண்டும்?










Leave a Reply