வேலூர், ஏப். 21-
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ளவர் பரிதா இவர் பேரணாம்பட்டு நகரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேரணாம்பட்டு நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். வீடில்லாத ஏழை, எளியவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் பெற்று தரப்படும். இதுபோன்று அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று பேரணாம்பட்டு நகரில் வீதி வீதியாகச் சென்று அதிமுக வேட்பாளர் பரிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த தேர்தல் பிரச்சாரம் மற்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர் பரிதாவுடன் பேரணாம்பட்டு நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். சில இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.











Leave a Reply