Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
காட்பாடி அடுத்த பொன்னையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கடை உரிமையாளர் அதிரடி கைது!வேலூர், மே 13-வேலூர் மாவட்டம், பொன்னை – சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள டி. ஆர்.குப்பம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காட்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களில் போலீசார் தீவிரமாக தேடியதில் குட்கா பொருட்கள் சிக்கின. சிக்கிய குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1.50 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமையாளர் பாண்டுரங்கன் மீது பொன்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த தகவல் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காட்பாடியில் தமிழக வெற்றி கழகத்தோடு கைகோர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!வேலூர், மே 12-தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.அந்த வகையில், வேலூர் மாவட்டம், காட்பாடியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட வெற்றி விழா கொண்டாடப்பட்டது.காட்பாடி – சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட விழாவிற்கு ஒன்றிய தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் முன்னிலை வகிதார். தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!வேலூர், மே 12 -வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உறுதியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கால்நடை மருத்துவமனை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிப்பு!வேலூர், மே 12-வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா, எர்த்தாங்கல் ஏரியான் பட்டி கிராமத்தைச் சுற்றி 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது: அந்த கிராமத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆடு, மாடு கோழி மற்றும் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். இந்த மக்கள் கூலித் தொழில், விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு கால்நடை மருத்துவமனை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் எங்கள் பகுதிக்கு கால்நடை மருத்துவமனை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனு மீது விசாரணை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.
கே. வி. குப்பம் வட்டாட்சியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர புலன் விசாரணை!வேலூர், மே 12-வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் வட்டாட்சியராக கே. பலராமன் (40 )பணியாற்றி வந்தார். இவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.குடியாத்தம் வட்டம், எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். இவர் வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேர்தலின் போது கே. வி. குப்பம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தேர்தலில் அவர் சிறப்பாக பணியாற்றினார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ( 9ஆம் தேதி) இரவு பலராமன் அவரது உடலில் பலத்த காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மர்ம மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பலராமனுக்கு மனைவி சுகன்யா, இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் வருவாய்த்துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு தொழிற்கல்வி ஆசிரியர் வாழ்த்து, பாராட்டு!வேலூர், மே 11-தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.இது குறித்து மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். முதல் அறிவிப்பாக வீட்டு மின் இணைப்புகளுக்கு 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் வரை கட்டணமின்றி வழங்கப்படும் என்ற அறிவிப்பினையும், பெண்களுக்கான பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு படை ஆகியவற்றை உருவாக்கப்படும் என அறிவித்துள்ள அறிவிப்பினை வரவேற்கின்றோம்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கின்ற மக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான நல்லா இருப்போம் நல்லாகவே இருப்போம் என அறிவித்துள்ள பதவியேற்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்புகளை வரவேற்கின்றோம்.இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலும்· 1978-79ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு 11 மற்றும் 12ஆம் வகுப்பில் நடைமுறையில் இருந்த பாடங்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியேற்பட்டால் அவை நிரப்பப் படாமல் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதால் மெல்ல கற்கும் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பினை மறுக்கும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு முறைக்கு மேல் தோல்வி அடைந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொதுப்பாட பிரிவுகளிலோ, அறிவியல் பிரிவிலோ அல்லது கலை பிரிவிலோ சேர்க்கப்படுவதில்லை. இதனால் இந்த மாணவர்கள் உயர் கல்வி பெற இயலாத சூழல் ஏற்படுகின்றது. மேலும் பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர வேண்டும் என்று சொன்னால் அவர்கள் வெகு தொலைவுக்கு சென்று கல்வி பெறவேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு தொழிற்கல்விப் பாடத்தையாவது கட்டாய பாடமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். மேலும் மூன்று முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 128 ஆசிரியர்கள் அனைவருக்கும் தொழிற்கல்வி ஆசிரியராக பணி வரன்முறை செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளிர் கிரிக்கெட் அணிக்கு வேலூர் வீராங்கனைகள் இன்று தேர்வு: சங்கத் தலைவர் ஜி.வி. சம்பத் அறிக்கை!வேலூர், மே 10-வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மாவட்டங்களுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான வேலூர் மாவட்ட மகளிர் கிரிக்கெட் அணிக்கு இளம் வீராங்கனைகள் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வேலூர் கொணவட்டம் ராஜேஸ்வரி வளாகத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்ட கிரிக்கெட் அகாடமியில் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள் 1.9.1996-க்கு பின்னரோ அல்லது 31.8.2014 முன்னதாகவோ பிறந்திருக்க வேண்டும்.தேர்வுக்கு வருபவர்கள் ஆதார் சான்று நகல், பிறந்த தேதி சான்று நகல், கிரிக்கெட் கிட் மற்றும் வண்ண உடை அணிந்து வரவேண்டும். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க மகளிர் விளையாட்டு பிரிவு நிர்வாகி லோகேஸ்வரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச ரெட்கிராஸ் தினம்: மகளிருக்கான இலவச தையற் பயிற்சி வகுப்புகளை வேலூர் கோட்டாட்சியர் அ.செந்தில்குமார் தொடங்கி வைப்பு!வேலூர், மே 10-இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளை சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்த மனித நேய பண்பாளர் ஜீன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கிளை தலைவர் அ.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது…ரெட்கிராஸ் அமைப்பு உலகளாவிய அமைப்பு மனித நேய பண்பாளர் ஜூன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாள், சர்வதேச ரெட் கிராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் சார்பில் இலவச தையற் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைப்பத்தில் நான் மகிழ்சியடைகின்றேன். காட்பாடி ரெட்கிராஸ் கிளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட செயல்பாடுகள் செய்து வருவது பாராட்டத்தக்கது. தையற் பயிற்சி வகுப்பிலும் மேலும் கணினி பயிற்சி வகுப்பிலும் சேர்ந்து பயன்பெற வேண்டும். சர்வ தேச ரெட்கிராஸ் தினத்தில் மனித நேயத்துடன் பணிகள் செய்வதை பாராட்டுகின்றேன் என்றார். இந்த விழா விருதம்பட்டு செசயர் ஹோம் வளாகத்தில் உள்ள பாத் பைன்டர் அறக்கட்டளை அலுவலகத்தில் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பாலச்சந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி பாத் பைன்டர்ஸ் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.சுதாகர், சேவகன் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, டி.லிவிங்ஸ்டன் மோசஸ், எ.ஆனந்தகுமார், என்.ஞானவேல், பி.என்.ராமச்சந்திரன், எஸ்.அருள்சுடர், வி.ஆறுமுகம், ஆகியோர் பங்கேற்றனர்.இலவச தையற் பயிற்சி மையத்தினை கோட்டாட்சியர் அ.செந்தில்குமார் திறந்து வைத்தார். வட்டாட்சியர் ஆர்.பாலசந்தர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முடிவில் பொருளாளர் வி.பழனி நன்றி கூறினார்.
1
2
3
4
…
91
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.