Archives
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
சர்வதேச ரெட்கிராஸ் தினம்: மகளிருக்கான இலவச தையற் பயிற்சி வகுப்புகளை வேலூர் கோட்டாட்சியர் அ.செந்தில்குமார் தொடங்கி வைப்பு!வேலூர், மே 10-இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளை சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்த மனித நேய பண்பாளர் ஜீன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கிளை தலைவர் அ.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது…ரெட்கிராஸ் அமைப்பு உலகளாவிய அமைப்பு மனித நேய பண்பாளர் ஜூன் ஹென்றி டுனான்ட் பிறந்த நாள், சர்வதேச ரெட் கிராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் சார்பில் இலவச தையற் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைப்பத்தில் நான் மகிழ்சியடைகின்றேன். காட்பாடி ரெட்கிராஸ் கிளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட செயல்பாடுகள் செய்து வருவது பாராட்டத்தக்கது. தையற் பயிற்சி வகுப்பிலும் மேலும் கணினி பயிற்சி வகுப்பிலும் சேர்ந்து பயன்பெற வேண்டும். சர்வ தேச ரெட்கிராஸ் தினத்தில் மனித நேயத்துடன் பணிகள் செய்வதை பாராட்டுகின்றேன் என்றார். இந்த விழா விருதம்பட்டு செசயர் ஹோம் வளாகத்தில் உள்ள பாத் பைன்டர் அறக்கட்டளை அலுவலகத்தில் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பாலச்சந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி பாத் பைன்டர்ஸ் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.சுதாகர், சேவகன் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ.தீனபந்து, டி.லிவிங்ஸ்டன் மோசஸ், எ.ஆனந்தகுமார், என்.ஞானவேல், பி.என்.ராமச்சந்திரன், எஸ்.அருள்சுடர், வி.ஆறுமுகம், ஆகியோர் பங்கேற்றனர்.இலவச தையற் பயிற்சி மையத்தினை கோட்டாட்சியர் அ.செந்தில்குமார் திறந்து வைத்தார். வட்டாட்சியர் ஆர்.பாலசந்தர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முடிவில் பொருளாளர் வி.பழனி நன்றி கூறினார்.
காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்பதால், நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்துத் தரக் கோரி மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம்
பெத்தனாச்சிவயல் கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு
வானிலை
முதல்வரை பாதுகாக்கும் பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைப்பு!வேலூர், மே 7-தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு அரசு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் விஜய்யின் பாதுகாப்பு பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு அரசின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் முதல்வராக விரைவில் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சென்னையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை விஜய் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளார்.இதற்கிடையே தான் விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திடீரென பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் விஜய்யை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.இதற்கிடையே தான் நேற்று காலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் டிஐஜி தர்மராஜன் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இவர்தான் தற்போது விஜய்யின் பாதுகாக்கும் பொறுப்பில் நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஆவார். விஜய்யின் பயணம் மற்றும் நிகழ்ச்சிகளில் போலீஸ் அதிகாரிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு கொடுப்பதுதான் டிஐஜி தர்மராஜனின் பணியாகும்.தர்மராஜன் தற்போது வேலூர் சரக டிஐஜியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். தமிழ்நாடு கேடரை சேர்ந்த இவர் மத்திய பணியில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டார். இவர் சென்னையில் உளவுத்துறை இணை கமிஷனராக பணியாற்றினார். கடந்த ஆண்டு இந்த பொறுப்பில் இருந்து வேலூர் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வேலூர் டிஐஜியாக இருக்கும் தர்மராஜன் வசம் விஜய்யின் பாதுகாப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.விஜய்யின் பாதுகாப்பு சார்ந்த ஏற்பாடுகளை டிஐஜி தர்மராஜன் மேற்கொள்வார். இவரது உத்தரவின் பேரில் தான் விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஒருவார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விஜய்யின் ‘கான்வாய்’ உள்பட அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு டிஐஜி தர்மராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு பொறுப்பை டிஐஜி திருநாவுக்கரசு மேற்கொண்டு வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வேலூர் பாலாற்றில் குப்பைகள் ஓட்டப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!வேலூர்,மே 7-வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விருதம்பட்டு அருகே பாலாற்றங்கரையில் உள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றம் செய்திடும் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .வேலூர் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் இந்த ஆய்வின் போது கலந்து கொண்டனர். குறிப்பாக வேலூர் பாலாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகற்றம் செய்வது எவ்வாறு? குப்பைகள் அப்புறப்படுத்தப்படுவது முழுமையாக நடக்கிறதா? என்பது குறித்து விரிவாக கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் பாலாற்றிலிருந்து மாவட்ட ஆட்சியர் புறப்பட்டார். இந்த ஆய்வு இந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ராய்ப்பூரில் நடந்த 11வது தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி 2ம் இடத்தை பிடித்தது:மாநில செயலாளர் யோஜூவா டேனியல் வீரர்களை வாழ்த்தினார்!காஞ்சிபுரம், மே 7 -சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 11வது தேசிய கால்பந்து போட்டியில், பங்கேற்ற தமிழ்நாடு அணி தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்று வரை சென்று 2ம் இடத்தை பிடித்துள்ளது.17 வயதுக்கு உட்பட்ட மாநில அளவில் பயிற்சி பெற்ற கால்பந்து வீரர்களுக்கான 11வது தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இதில், ராய்ப்பூர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, பீகார், அசாம், கர்நாடகா, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்றனர்.அனைத்து போட்டிகளும் காலை நேரத்தில் மட்டுமே நடத்தப்பட்டன.’லீக் முறையில்’ நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி – இறுதிப் போட்டி வரை சென்று, 11வது தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் 2ம் இடத்தை பிடித்தது. இந்த அணிக்கு கோப்பை, கேடயங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வந்தடைந்த கால்பந்தாட்ட வீரர்களை, தமிழ்நாடு கால்பந்தாட்ட மாநில செயலாளர் யோஜூவா டேனியல் வெகுவாக பாராட்டினார்.இதேபோல் காஞ்சிபுரம் ‘கோல்டன் எரா’ கால்பந்தாட்ட கிளப் மேலாளர் விக்னேஷ், பயிற்சியாளர் கோகுல் ஆகியோர் கால்பந்தாட்ட வீரர்களை பாராட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருந்து வழங்கும் இடத்தில் மக்கள் அவதி
1991-க்கு பிறகு காட்பாடியில் முதல்முறையாக தோற்ற துரைமுருகன்! 3வது இடத்தில் திமுகவின் ஜாம்பவான்
தவெக அமைச்சரவையில் சகாயம் ஐஏஎஸ் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர்?வேலூர், மே 6-தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட ஏற்பாடு எனவும் சூசகம்.தமிழகத்தின் கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கனிமவள கொள்ளையர்களுக்கு காப்பு கட்ட ஏற்பாடு என தகவல்.இயற்கையை பாதுகாக்க தவெக நடவடிக்கை எடுக்கும் சிறப்பு முயற்சி என தகவல்.தமிழகத்தில் கனிமவள கொள்ளைக்கு முற்றுகட்டை வைக்க கனிம வள கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி தகவலாக ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சகாயத்தை தவெக அமைச்சரவையில் சேர்த்து அவரை சுரங்கம் மற்றும் கனிமவளத்துறைக்கு அமைச்சராக்கவும் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைத்து அமைச்சரவையில் தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சூசகமாக தகவல்கள் வெளியாகி உள்ளது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.ஏற்கனவே கனிமவள கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இதனால் அவர் திமுக மற்றும் அதிமுக அரசுகளால் பந்தாடப்பட்டு முக்கிய பதவிகளில் அவரே தொடர விடாமல் செய்தனர்.மேலும் அவர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கனிம வள கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் ஆய்வு செய்தபோது அரசு தரப்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில் சம்பவ இடத்திலேயே ஆதாரங்களை காப்பாற்ற சுடுகாட்டில் கட்டில் போட்டு இரவு உறங்கியவர் என்பதும் அது அவருடைய நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.தற்போது புதிதாக ஆட்சி அமைக்கும் தவெக தலைவர் விஜய் அவர்கள் புதிய அமைச்சரவையில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக சகாயம் அவர்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவலால் கனிமவள கொள்ளையர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் இயற்கையை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் அதனால் கனிம வள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சரவையில் அது தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பான அளவில் தமிழகத்தை பாதுகாக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து விவகாரங்களையும் கருத்தில் கொண்டு கனிமவள கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் தவெக தலைவர் விஜய் அவர்களின் முக்கிய நடவடிக்கையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆகவே தமிழகத்தில் கனிமவள கொள்ளையர்களுக்கு காப்பு கட்டும் நடவடிக்கையை தவெக எடுக்கும் என்பதுதான் தற்போதைய செய்தியாக உள்ளது.
1
…
3
4
5
…
91
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.