பொதுமக்கள் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அரசு அலுவலர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்- காட்பாடியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கோட்டாட்சியர் அறிவுரை!வேலூர், ஜூன் 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த ஜமாபந்தி நிறைவு விழா 23ம் தேதி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை வேளையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், பவிதா, திலீப்குமார், கோபி, லாவண்யா மற்றும் கிராம உதவியாளர்கள் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பேரில் வருவாய் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சத்து தொன்னூற்று ஆயிரத்து இருநூற்று நாற்பத்தி நான்கு மதிப்பீட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உட்பிரிவு ஐந்து, பட்டா மாற்றம் ஒன்று, இலவச வீட்டு மனை பட்டாக்கள் 31 ,சமூக பாதுகாப்பு திட்டம் 20, பரப்பு திருத்தம் 7, வேளாண்மை துறை சார்பில் 4, மாற்றுத்திறனாளிகள் சார்பில் இரண்டு என நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கோட்டாட்சியர் செந்தில்குமார் வழங்கினார். இதில் சிறப்புரையாற்றி பேசிய கோட்டாட்சியர் செந்தில்குமார், இங்கு எந்த பணிகள் நடைபெற வேண்டும் என்றாலும் இடைத்தரகர்களை குறிப்பாக புரோக்கர்களை நாடாதீர்கள். பொதுமக்கள் நேரடியாக தொடர்புடைய அரசு அலுவலர்களை நாடி தங்களது பணிகளை முடித்து செல்லுங்கள். வீணாக உங்களது பணத்தை புரோக்கர்களிடம் கொடுத்து இழக்க வேண்டாம். குறிப்பாக எந்த பணி என்றாலும் முடித்து தருவதற்கு அரசு அலுவலர்கள் தயாராக உள்ளனர். பொதுமக்கள் அரசு அலுவலர்களை நன்கு பயன்படுத்தி பயன் பெறுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை துணை வட்டாட்சியர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். விவசாயிகள் தங்களது புதிய ரக நெல்மணிகளை அறிமுகம் செய்து சக விவசாயிகளுக்கு விதைகளாக வழங்கினர். இதில் விவசாயிகள் சார்பில் பள்ளிக்குப்பம் நரசிம்மன், லட்சுமணன், புண்ணியகோட்டி உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஜமாபந்தி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை சிறப்புடன் நடைபெற அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்துக் கொடுத்த காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரிக்கு அனைவரும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர் .மேல் பாடி வருவாய் ஆய்வாளர் பிரபு நன்றி கூறினார். இந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி கல்புதூர் பகுதியில் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில்இளைஞர்களிடையே மோதல்: ஒருவர் அடித்துக் கொலை- கொலையாளிகளுக்கு போலீஸ் வலை!வேலூர், ஜூன் 24-காட்பாடி கல்புதூர் பகுதியில் நடைபெற்ற கெங்கையம்மன் கோயில் திருவிழாவின் போது கல்புதூர், வண்டறந்தாங்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவேறு பிரிவு இளைஞர்களுக்கு இடையே முன்விரோதம் தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது தினகரன் என்ற இளைஞரை காணவில்லை. காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த இளைஞர் தினகரன் முகத்தில் காயங்களுடன் கல்புதூர் பகுதியில் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இறந்தவர் உடலை காட்பாடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேரிடம் காட்பாடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை காட்பாடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீழ்மட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிமாணவர்களுக்குநோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா!செய்யாறு, ஜூன் 24 -செய்யாறு அடுத்தகீழ்மட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளையொட்டி செய்யாறு அடுத்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட த.வெ.க.,பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கும் விழா கீழ்மட்டை கிராமத்தில் நடந்தது.விழாவிற்கு அனக்காவூர் த.வெ.க.,வின் மேற்கு ஒன்றிய செயலாளர் சேதுபதி தலைமை தாங்கினார்.‌ இணை செயலாளர் சூரியா முன்னிலை வகித்தார். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், இனிப்பு ஆகியவற்றை வழங்கினர். இதைத் தொடர்ந்து கீழ்மட்டை கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் மேற்கு ஒன்றிய இளம்பெண்கள் பாசறை அமைப்பாளர் யோகேஸ்வரி, ஊராட்சி செயலர் பார்த்தசாரதி, இணைச் செயலாளர் சுதர்சன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கீழ்மட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிமாணவர்களுக்குநோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா !செய்யாறு, ஜூன் 24 -செய்யாறு அடுத்தகீழ்மட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளையொட்டி செய்யாறு அடுத்த அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட த.வெ.க.,பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கும் விழா கீழ்மட்டை கிராமத்தில் நடந்தது.விழாவிற்கு அனக்காவூர் த.வெ.க.,வின் மேற்கு ஒன்றிய செயலாளர் சேதுபதி தலைமை தாங்கினார்.‌ இணை செயலாளர் சூரியா முன்னிலை வகித்தார். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், இனிப்பு ஆகியவற்றை வழங்கினர். இதைத் தொடர்ந்து கீழ்மட்டை கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் மேற்கு ஒன்றிய இளம் பெண்கள் பாசறை அமைப்பாளர் யோகேஸ்வரி, ஊராட்சி செயலர் பார்த்தசாரதி, இணை செயலாளர் சுதர்சன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!வேலூர், ஜூன் 23-குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிச்சனூர் கங்காதர சுவாமி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த கூலி வழங்கும் தனியார் முதலாளிகளை கண்டிக்கிறோம். அம்பேத்கர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் தனியார் பள்ளிகளின் (பிரம்மாஸ்) கல்வி கட்டண உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம் நகரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னம்பட்டி கிராமத்தில் 30 வருடமாக உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க வழிவகை காண வேண்டும். சீவூர் பஞ்சாயத்து கள்ளூர் கிராமம் குறிஞ்சி நகர் சுற்றியுள்ள பகுதிகளில் கால்வாய் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 22.6.2026 மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ராம.சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் வினோத்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கோல், நகர தலைவர் சங்கர், நகர செயலாளர் கஜேந்திரன், நகர சக்தி மாநகர தலைவர் மகேஸ்வரி, நகர இளைஞர் அணி செயலாளர் வினோத்குமார், ஒன்றிய தலைவர் கோபி, ஒன்றிய செயலாளர் யுவராஜ், ஒன்றிய மகளிர் அணி தலைவர் நளினி, ஒன்றிய செயலாளர் கோகுல்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ,கைத்தறி காவலன் எஸ் .ரமேஷ் வரவேற்றார். அகில பாரத மக்கள் இயக்கத்தின் நிறுவனர் கார்த்திக் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சம்பத்குமார், ரமேஷ் குமார், உறுதிமொழி ஆணையர் எம். குமார், வழக்கறிஞர்கள் கோபி, சமூக ஆர்வலர் நாராயணன், பிரவீன் குமார், செங்குன்றம் பாலாஜி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் நலன் ,சமூக நீதி உரிமைகளை வென்றெடுக்க பொதுமக்கள் கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் என அனைவரும் வருகை தந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக உரிமைகளை வென்றெடுக்க இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டம் முறையாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் முன் அனுமதி பெற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த வேளையிலேயே பிரம்மாஸ் பள்ளிகளின் தாளாளர் அங்கு காரில் வருகை தந்தார். அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தை செய்தி மற்றும் புகைப்படம், ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த செய்தியாளர்களை அழைத்துச் சென்று அவர் தனியாக பேட்டி அளிக்கிறேன் என்று சொல்லி, ஒரு பெற்றோரும் இதற்கு இசைவு தெரிவிக்கவில்லை, ஒரு தனிநபர் மட்டும் தன்னிச்சையாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டினார். முறையாக காவல் துறையினரிடம் முன் அனுமதி பெற்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் இப்படி ஒரு சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்து இப்படி நடந்து கொண்டது சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு வழி வகுத்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி ஆர்ப்பாட்டம் நடந்த போது இடையூறு ஏற்படுத்தியவர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் ஒரே கோரிக்கையாக தற்போது மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ரமேஷ் நன்றி கூறினார்.

செய்யாறில் த.வெ.க.,வின் பெண் பொறுப்பாளர் பிரீத்தி ஏற்பாட்டில்முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் விழா கோலாகலம் !செய்யாறு, ஜூன் 23 -செய்யாறில் த.வெ.க.,வின் பெண் பொறுப்பாளரான பிரீத்தி ஏற்பாட்டில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.செய்யாறு நகரத்திற்கு உட்பட்ட ஆரணி கூட்டு சாலையில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தில், மாவட்ட இளம் பெண்கள் அணி இணை அமைப்பாளர் எஸ்.பிரீத்தி புதியதாக பொறுப்பேற்றுள்ளார். இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். பொதுமக்கள் மத்தியில் கேக் வெட்டி முதல்வரின் பிறந்தநாள் விழாவை விமரிசையாக கொண்டாடினர். இதைத் தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அவ்வழியே சென்ற அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்த பயணிகளுக்கும் மாவட்ட இளம் பெண்கள் அணி இணை அமைப்பாளர் பிரீத்தி கேக் மற்றும் இனிப்பு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரச்சார – பேச்சாளர் அணி அமைப்பாளர் விநாயகமூர்த்தி, நிர்வாகிகள் நிர்மலாதேவி, காமேஷ், பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்யாறில் த.வெ.க.,வின் பெண் பொறுப்பாளர்கள் இருவர் ஏற்பாட்டில் முதல்வர் விஜய்யின் பிறந்த நாள் விழா கோலாகலம் !செய்யாறு, ஜூன் 23 -செய்யாறில் த.வெ.க.,வின் பெண் பொறுப்பாளர்களான புவனேஸ்வரி, பிரீத்தி ஆகிய இருவரின் ஏற்பாட்டில், தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான நேற்று கேக் வெட்டி – அன்னதானம் வழங்கி கோலாகலமாக கொண்டாடினர்.செய்யாறில் த.வெ.க.,வின் மத்திய ஒன்றிய செயலாளராக புவனேஸ்வரி பொறுப்பு வகித்து வருகிறார். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி செய்யாறில் உள்ள கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி நுழைவு வாயிலில் 52 கிலோ எடையுள்ள கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடினர். அவ்வழியே சென்ற அரசு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, பலரும் கலந்து கொண்டனர்.இதே போல் செய்யாறு – ஆரணி கூட்டு சாலையில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இளம் பெண்கள் அணி இணை அமைப்பாளர் எஸ்.பிரீத்தி ஏற்பாட்டில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். பொதுமக்கள் மத்தியில் கேக் வெட்டி முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதைத் தொடர்ந்து 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பிரச்சார பேச்சாளர் விநாயகம், நிர்வாகிகள் தேவி, காமேஷ், பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.