மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ஹஜ் பயணிகள் சார்பில் இருக்கைகள் அன்பளிப்பு: 5-வது ஆண்டாகத் தொடரும் மனிதநேயப் பணி!

மேட்டுப்பாளையம் ஹஜ் பயணிகள் வழிகாட்டு குழுவின் சார்பாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு இருக்கைகள் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கு செல்ல இருக்கும் பயணிகள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அமர்வதற்காக இந்த இருக்கைகளை மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் வழங்கினர்.
அப்போது ஹஜ் பயணிகள் மற்றும் வழிகாட்டு குழுவினர் தெரிவிக்கையில்:
“ஆண்டுதோறும் புனித ஹஜ் பயணம் செல்ல இருக்கக்கூடிய பயணிகள், மக்கள் பயன்பாட்டிற்காக மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில் வழக்கம் போல் இந்த ஆண்டும் வழங்கி உள்ளார்கள். இத்தகைய நலத்திட்ட உதவிகள் தற்போது ஐந்தாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது ஹஜ் பயணிகள், வழிகாட்டு குழுவினர் மற்றும் அரசு மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர். புனிதப் பயணத்திற்கு முன்பாக அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்த ஹஜ் பயணிகளின் இந்த நற்செயலை மருத்துவர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.