வேலூரில் இந்திரா காந்தியின் நினைவு தினம் – காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை!

வேலூர், நவ. 1-
வேலூர் மாவட்டம், வேலூர் ஆபீஸ் லைன், மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகம், இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அக்டோபர் 31-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, வேலூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு இந்திரா காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வாஹித் பாஷா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்டத் தலைவர் டீகாராமன் முன்னிலை வகித்தார். இதில் சி.கே.டி. ஆனந்த், சுதர்சன், ஜெயபிரகாஷ், பிரபாகரன், முபாரக் கௌஷிக் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.