‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் கீ.வ.குப்பம் வட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட வேலூர் மாவட்ட ஆட்சியர்!

வேலூர், அக்.24-
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் படி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், ஒவ்வொரு மாதமும்
வட்ட அளவில்
தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை
ஆய்வு செய்து,மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும்,தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி
செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர்.சி.ஜோசப் விஜய்யால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்,
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், அக்.22 -அன்று ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’-என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில்,கீ.வ.குப்பம் வட்டம்,
இலத்தேரி ஊராட்சிக்குட்பட்ட கனக சமுத்திரம்,செஞ்சி,செஞ்சி மோட்டூர்,
சோழமூர் ஊராட்சிக்குட்பட்ட எடகிருஷ்ணாபுரம்,காவனூர்,நாகல்,கெம்மகுப்பம்,சென்னாங்குப்பம் ஆகிய கிராமங்களுக்கு சென்று
அந்தந்த பகுதியிலுள்ள
கிராம நிர்வாக அலுவலகங்கள்,
பள்ளிக்கூடங்கள்,
சத்துணவுக் கூடங்கள்,அங்கன்வாடி மையங்கள்,பொது நூலகங்கள், நியாய விலைக் கடைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,ஏரி,
கால்வாய்களின் குடிநீர் வசதி, விவசாயம் போன்ற
பொதுமக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து, பல வகையான ஆய்வுகள் மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளுக்குப் பின்னர்
கீ.வ.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
மேலும்,வருவாய்த்துறையின் சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.22,00,000/- மதிப்பில் வீட்டுமனை பட்டாக்களும், பொது சுகாதாரத்துறையின் சார்பில்,10 பயனாளிகளுக்கு ரூ.20,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களும், மகளிர் திட்டம் சார்பில், 17 பயனாளிகளுக்கு
சமுதாய முதலீட்டு நிதி மற்றும் நலிவுற்றோர் தொழில் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.11,50,000/- மதிப்பில் கடனுதவிகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.2,56,022/- மதிப்பில் பவர் டில்லர், தெளிப்பு நீர் பாசன கருவி, உளுந்து மற்றும் காராமணி விதை தொகுப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்
4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38,715/- மதிப்பில்
சிறப்பு சக்கர நாற்காலி,
சிறப்பு நாற்காலி, உருபெருக்கி,மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பில்லாந்திபட்டு கிராமத்தில் உள்ள சமூக நீதித்துறையின்கீழ் செயல்படும் பள்ளி மாணவியர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து,மாணவிகளிடம் கற்றல் திறன் மற்றும் அடிப்படை வசதிகள்
குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது கீ.வ.குப்பம் சட்டமன்ற உறுப்பினர்.ஏ.தென்றல்குமார்,
மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.சு.ஈஸ்வரன், மாவட்ட சுகாதார அலுவலர். மரு.விஜய் சந்திரன்,மகளிர் திட்ட இயக்குநர். ஜெயசுதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐய்யப்பத்துரை, வேளாண்மை இணை இயக்குநர்.ஸ்ரீ வித்யா,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்.ராஜராஜன்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.பிரேமலதா, தனித்துனை ஆட்சியர் (ச.பா.தி)சி.மாறன்,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்.பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்.ஜெரினா பேகம், துணைப் பதிவாளர்
(பொது விநியோகத் திட்டம்) த.சுவாதி,குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர்.செந்தில்குமார், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார்,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால்,வட்டாட்சியர். கி.சித்ரா, இளநிலை மறுவாழ்வு அலுவலர் இனியன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள். தாட்சாயிணி, சாந்தி,பள்ளி தலைமையாசிரியை கவிதா உட்பட பலர் உடனிருந்தனர்.