காட்பாடியில் 5.7 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் – வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் தூய்மைப் பணி!

வேலூர், நவ. 11-
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி பகுதியில் (மண்டலம் 1), தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஒரே நாளில் சுமார் 5.7 டன் (5,700 கிலோ) பட்டாசுக் கழிவுகளைத் தூய்மைப் பணியாளர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
காட்பாடி மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாகத் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இதில், தீபாவளியன்று பொதுமக்கள் வெடித்த பட்டாசுகளால் உருவான கழிவுகள் மட்டும் தனியாகச் சேகரிக்கப்பட்டு 5.7 டன் அளவிற்கு அகற்றப்பட்டன. மேலும், பொதுமக்களிடமிருந்து வழக்கமாகச் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என மொத்தம் 43 டன் கழிவுகளும் முழுமையாகச் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்பட்டன. தூய்மை பணியாளர்கள் பண்டிகை நாட்களிலும் ஓய்வின்றி உழைத்து, குப்பைகள் தேங்காமல் விரைந்து அகற்றிய தூய்மை பணியாளர்களின் சேவையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர்
தூய்மைப் பணியாளர்களை பண்டிகை நாட்களிலும் அவர்களிடம் கனிவாக சொல்லி குப்பைகளை அகற்றியது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.