குடியாத்தம் பிரம்மாஸ் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரி அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் ஆட்சியரிடம் புகார் மனு!வேலூர், ஜூன் 30-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியரக காயிதே மில்லத் அரங்கில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நடந்தது. இதில், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே, கடந்த 22.06.2026 (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை வலியுறுத்தும் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, காவல்துறையின் அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்லும் நோக்கில் பொதுமக்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, மாலை சுமார் 5.10 மணியளவில் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள பிரம்மாஸ் பள்ளியின் நிறுவனர் செந்தில் மற்றும் அவருடன் சிலர், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வேகமாக காரில் வந்து, ஆர்ப்பாட்ட மேடைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி விட்டார். இதனால் அசம்பாவிதம் அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், மாநில நிர்வாகிகள் ஆலோசித்து, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே மாலை 5.25 மணியளவில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.‌ மேலும், ஆர்ப்பாட்டத்தின் 5வது கோரிக்கையாக, குடியாத்தம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளிகள், குறிப்பாக பிரம்மாஸ் பள்ளியில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்ததாகவும், அதே நேரத்தில் பள்ளி நிறுவனர் போராட்ட இடத்திற்கு வந்தது பதட்டத்தை ஏற்படுத்தியதாகவும் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரம்மாஸ் பள்ளி தொடர்பாக ஏற்கனவே தமிழக முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.சமூக நல உணர்வுமிகு பொதுமக்களால் 10 நாட்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 22.06.2026 அன்று மாலை 6.30 மணியளவில் குடியாத்தம் நகர காவல் நிலையத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிரம்மாஸ் பள்ளி மற்றும் அதன் நிர்வாகத்தை கண்டித்து, அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தேதி, காவல்துறை அனுமதி மற்றும் போதிய பாதுகாப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆர்ப்பாட்டம் செய்த திமுகவினர் கைது!வேலூர், ஜூன் 30-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி பகுதி திமுகவினர் காவல் துறை அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அமைச்சர் பதவி விலக கோரி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி திமுக வேலூர் மாநகராட்சி துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான எம். சுனில்குமார், வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, மாமன்ற உறுப்பினர் டீட்டாசரவணன், பழைய காட்பாடி மோ. திருமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து சித்தூர் பேருந்து நிலையம் அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமான சூழ்நிலையும் ஏற்பட்டது. மாலையில் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து திமுகவினரும் விடுவிக்கப்பட்டனர்.

காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: ஆர்ப்பாட்டம் செய்த திமுகவினர் கைது!வேலூர், ஜூன் 30-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடி பகுதி திமுகவினர் காவல் துறை அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அமைச்சர் பதவி விலக கோரி ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி திமுக வேலூர் மாநகராட்சி துணை மேயரும், தெற்கு பகுதி செயலாளருமான எம். சுனில்குமார், வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா, மாமன்ற உறுப்பினர் டீட்டாசரவணன், பழைய காட்பாடி மோ. திருமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து சித்தூர் பேருந்து நிலையம் அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பும் பதட்டமான சூழ்நிலையும் ஏற்பட்டது. மாலையில் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து திமுகவினரும் விடுவிக்கப்பட்டனர்.

அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அச்சம்; மது அருந்தும் கூட்டத்தால் பாதுகாப்பு கேள்விக்குறி – போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!ராணிப்பேட்டை, ஜூன் 30-ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டை 3வது கண் பாதை பகுதியில், 10க்கும் மேற்பட்டோர் சாலையோரம் அமர்ந்து மது அருந்தி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அரக்கோணம் காவல்துறை முறையாக வாகன ரோந்து மேற்கொள்ளவில்லை எனவும், இதன் காரணமாகவே இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், பலமுறை காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து போலீசார் முறையான ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட நேரங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை அரசு பொருட்காட்சியில் கீதம் இசை நிகழ்ச்சி கோவை வ உ சி மைதானத்தில் கடந்த சில வாரங்களாக தமிழக அரசின் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது அதில் தினம் தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன நேற்று சனிக்கிழமை கோவை நா லோகுவின் கீதம் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாடகர்கள் லோகு தாமரைச்செல்வி பிரகாஷ் கீதா கங்காதரன் விநாயகம் ராமலிங்கம் பன்னீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு பழைய புதிய பாடல்களை பாடி அசத்தினர் இந்த நிகழ்ச்சியை பொருட்காட்சி வந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர் நிகழ்ச்சிகளை தாமரைச்செல்வி தொகுத்து வழங்கினார்

கஞ்சா விற்பனை செய்த மதுரை இளைஞர் கைது!வேலூர், ஜூன் 29-வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மறைவான இடத்தில் கஞ்சாவை இளைஞர் ஒருவர் விற்பனை செய்வதாக குடியாத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் போலீசார் அந்த ரயில்வே மேம்பாலம் அருகில் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் மதுரை சின்னப்பாண்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் சின்னபாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்!வேலூர்,ஜூன் 29-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் நேற்று (28.06.2026) முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் செ. கருணாநிதி தலைமை தாங்கினார். இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ஆ. தாமரை வரவேற்றார்.முன்னாள் மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முனைவர் ந. கெஜலட்சுமி, முனைவர் மு. மலர்விழி, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கல்பனா மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் பா. சம்பத்குமார், முனைவர் என். குமரகுரு, முனைவர் சரஸ்வதி, முனைவர் கலைவாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.1964 முதல் 2025 வரை கல்லூரியில் பயின்ற 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வித் தர உயர்வு, தற்போதைய மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து உறுதுணையாக இருப்பதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.மேலும், முன்னாள் மாணவர்களான எஸ்.எஸ். ரமேஷ்குமார், பாலாறு மருத்துவமனை மோகன், கருணாநிதி, ஆசிரியர்கள் பரசுராமன், பிரகாசம், முத்துக்குமார், சிவபிரகாசம், சமூக ஊடகங்களில் கல்வி- வேலைவாய்ப்பு விழிப்புணர்வாளர் மற்றும் செய்தி துறை மூத்த பத்திரிக்கையாளர், பண்பாளர் பாரத் நந்தகுமார் மற்றும் வணிகவரித் துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கல்லூரியில் பயின்ற மலரும் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பேராசிரியர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் நன்றியைத் தெரிவித்தனர்.