ஆம்பூரின் வெற்றி நாயகன் வெங்கடேசன்; இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 19-தோல் பதனிடும் தொழிலுக்குப் பெயர்பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய சட்ட மன்ற தொகுதியான ஆம்பூரில் தேர்தலில் விறுவிறுப்பான அரசியல் களமாக மாறியுள்ளது. இந்த தொகுதியின் வெற்றி நாயகனாக பொறியாளர் வெங்கடேசன் வலம் வருகிறார்.தொழிலாளர்கள், கல்வியாளர்கள், விவசாயிகளின் அனைத்து தரப்பு மக்களும் பொறியாளர் வெங்கடேசனை ஆவலோடு வரவேற்கின்றனர்.ஆளும் திமுக தரப்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன், மூன்றாவது முறையாக மீண்டும் களம் காண்கிறார். இருமுறை வென்றாலும் அவரது குடும்பத்தினருடைய ஆதிக்கம், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு குடும்பத்தினருடைய தலையீடு, தொழிற்சாலைகளில் அவருடைய ஆதரவாளர்கள் செய்த தகராறுகள் போன்றவை அவருக்கு எதிராக மாற்றி உள்ளது. தோல் தொழிற்சாலைகளிடம் கட்டாய நன்கொடை வசூல் போன்றவற்றால் தொகுதியில் அவருக்கு எதிரான நிலை நிலவுகிறது.இன்ஜினியர், கல்வியாளர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதி, ஜாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களிடம் அன்போடு பழகும் எளிமையான மனிதர் அதிமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முன்னாள் திமுக செயலாளர் அகரம்சேரி சண்முகத்தின் மகன் மாதனூர் ஒன்றிய சேர்மன் ப. ச. சுரேஷ் குமார் திமுகவிலிருந்து விலகி, அதிமுகவுக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆம்பூர் இன்ஜினியர் வெங்கடேசனுக்கான நற்பெயரும், மாஜி அமைச்சர் கே.சி. வீரமணி தேர்தல் வேகமும், அகரம்சேரி சுரேஷ்குமார் களப்பணியும் ஆம்பூரில் வெற்றி நாயகனாக வெங்கடேசனை அழைத்துச் செல்கிறது.நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகத் தேர்தல் களத்தைச் சந்திக்கும் வேளையில், இத்தொகுதியில் இம்தியாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவை இவர் பெரிதும் நம்பியுள்ளார்.நாம் தமிழர் கட்சி சார்பில் அஃப்சியா நஸ்ரின் .எஸ் போட்டியிடுகிறார்.பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வஜீர் அகமது ஜே மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் கரீம் பாஷா போன்ற 16 வேட்பாளர்களும் களத்தில் இருப்பதால், சிறுபான்மையின வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.ஆம்பூர் நகர மன்ற உறுப்பினர், பள்ளி நிர்வாகி, திமுகவில் களப்பணி, 30 ஆண்டுகளாக சமூக சேவை என்று பல்வேறு தனித் திறன்களைக் கொண்ட வெங்கடேசன் தேர்தல் களத்தில் காலை முதல் இரவு வரை அயராத பணியாற்றுகிறார்.செல்லும் இடங்களை எல்லாம் உற்சாகப்படுத்துகிறார்.வேட்பாளர் வில்வநாதனுக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு சாதகமாக இருப்பது வெங்கடேசனுக்கு பிளஸ் பாயிண்ட். இருமுறை எம்எல்ஏவாக இருந்த வில்வநாதன் கடந்த கடைசி மூன்று ஆண்டுகளில் மக்களிடையே கடுமையான வெறுப்பை சம்பாதித்து உள்ளார் .மாதனூர் ஊராட்சி ஒன்றியம் ஆம்பூர் நகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் அவரது உறவினர்களை வைத்து ஆதிக்கம் செலுத்தியதால் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலைகளுக்குள் அவருடைய ஆதரவாளர்கள் புகுந்து ரகளை செய்தது, மதிமுகவில் பல ஆண்டுகள் பயணித்து திமுகவுக்கு வந்தவர் உண்மையான திமுக விசுவாசிகளை ஓரங்கட்டியது, ஜாதி அரசியலில் ஈடுபட்டது, மத ரீதியான பாகுபாடுகள் வில்வ நாதனுக்கு எதிரான மனநிலையை திருப்தி உள்ளது.என்னதான் திமுக அரசு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல நல்ல பெயரை பெற்றிருந்தாலும், வில்வநாதன், அவருடைய உறவினர்களின் கெடுபடியால் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவான சூழ்நிலை திரும்புகிறது.தொகுதியில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் இஸ்லாமியர்களும் முதலியார் சமூகத்தினரும் உள்ள நிலையில், அவர்களுக்கு கட்சியிலையோ, ஆட்சியிலையோ முக்கிய பொறுப்புகள் வழங்காமல் தான் சார்ந்த சமூகத்தினருக்கு பொறுப்புகள் வழங்கிய வில்வநாதனுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர்.ஆம்பூருக்கு வில்லனாகி விட்டார் வில்வநாதன். ஹீரோ ஆகிவிட்டார் வெங்கடேசன்.தோல் தொழிற்சாலைகளின் டாலர் ஏரியா மக்களும், தொழிற்சாலை உரிமையாளர்களின், விவசாயிகளின் பாமர மக்களின் ஆதரவு பெற்ற வெங்கடேசன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வது உறுதி என்கின்றனர் மக்கள்.

காட்பாடி தொகுதியில் காரில் இருந்து இறங்கி வந்து துரைமுருகன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு!வேலூர்,ஏப்.18-காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில் காட்பாடி வடக்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் துரைமுருகன். அப்போது கீரை சாத்து, மிளகாய்க்குப்பம் , தீயார் குப்பம் ஆகிய பகுதிகளில் தனது காரில் இருந்து இறங்கி வீடு வீடாகச் சென்று தனக்கு ஆதரவு தருமாறு வாக்காளர்களை கேட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இப்படி வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டிய துரைமுருகனை பார்த்து வாக்காளர்கள் இது புதியதாக உள்ளது என்று முனுமுனுக்கத் தொடங்கினர். குறிப்பாக திமுக அரசின் திராவிட மாடல் சாதனைகளை துரைமுருகன் விளக்கிப் பேசினார். மேலும் கட்சியின் புதிய தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு அவர் பிரச்சாரம் செய்தார் .காரில் இருந்து இறங்காமல் வாக்கு சேகரித்து வந்த துரைமுருகன் இம்முறை காரில் இருந்து இறங்கி வந்து வீடு வீடாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டது புதுமையாக உள்ளது என்று காட்பாடி வடக்கு ஒன்றிய வாக்காளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கே. வி. குப்பம் தனி தொகுதி புரட்சி பாரதம் வேட்பாளர் ஜெகன் மூர்த்தியை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்!வேலூர், ஏப்.18-வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் குடியாத்தம் மற்றும் கே. வி .குப்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். இந்நிலையில் வரும் 23ஆம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கே. வி. குப்பம் தனி தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் வேட்பாளர் ஜெகன் மூர்த்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகை தந்தார். அவர் வருகை தந்த தகவல் அறிந்து வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வேலழகன், காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான ராமு ஆகியோர் கே. வி. குப்பத்துக்கு விரைந்து சென்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை சந்தித்து ஆசி பெற்றனர். இதையடுத்து இருவரும் தங்களது தொகுதிகளான அணைக்கட்டு (வேலழகன்) காட்பாடி (ராமு) ஆகியோர் அவர்களது சொந்த தொகுதிகளுக்கு திரும்பி வந்து தொடர் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பேரணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல்!வேலூர்,ஏப்.18-வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பேரணாம்பட்டு அருகே மத்தூர் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை அதிகளவில் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல்கள் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மத்தூர் பகுதியில் வேளாங்கண்ணி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1361 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேளாங்கண்ணி, குபேந்திரன், யசோதா ஆகிய மூன்று பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ளபேருந்து நிலையத்தில் சரியான பராமரிப்பு இல்லாமலும் அன்றாடம் பொது மக்கள் பயணம் செய்ய கூடிய சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள் சாப்பிடக்கூடியதேநீர் கடை பழச்சாரு கடை மற்றும் சிற்றுண்டி உணவகம் உள்ள இடத்தில் சரியான படி உணவுகள் ஆயத்தமாக்கப் படுகிறதா பராமரிக்க படுகிறதா என்று பார்த்தால் கேள்வி குறிதான் காரணம் ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடைகளில் வெளியே மக்கள் பார்வையில் சாப்பிடும் உணவை அழகுக்கு வைத்து அதேயே எடுத்து சாப்பிடும் மக்களுக்கு உணவு கொடுப்பது மக்களிடையே முகச்சுழிப்பு உண்டாக்குகிறது மேலும் அந்த உணவு கடைக்கி அருகாமையில் கழிவு நீர் வெளிவருவது குப்பைகள் கொட்டப்படுவது அவசரத்திற்க்கு ஆண்கள் சிறுவர்கள் சிறுநீர் கழிப்பதும் வழக்கமாக உள்ளதுஇதனால் சிறுவர் சிறுமியார் ஆண்கள் பெண்கள் கர்ப்பிணி பெண்கள் வயதானவர்களுக்கு எல்லாம் நோய் தொற்று உண்டாகும் எனவே இதை குறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

காட்பாடி தொகுதி விருதம்பட்டில் அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 18-வேலூர் மாவட்டம் ,காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளராக ராமுவும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் களம் இறங்கியுள்ளனர். இதில் இவர்கள் இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. மற்ற அனைத்து வேட்பாளர்களும் இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுவதால் வாக்காளர்கள் தெளிவாக இம்முறை வாக்களிக்க தயாராகி வருகின்றனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடி வருகிறார். கடந்த முறை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராமு தோல்வியை தழுவினர். ஆனால் இம்முறை ராமு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு வேண்டி கேட்டுக்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் காட்பாடி விருதம் பட்டு பகுதியில் வீதி வீதியாகச் சென்று அதிமுக வேட்பாளர் ராமு வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிக்கும் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வேலூர் பலவன்சாத்துகுப்பத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 17-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி எழில் நகர் ஏரிக்கரை பகுதியில்திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் பகுதி செயலாளர் சி. எம்.தங்கதுரை திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

வாக்காளர்களுக்கு UPI மூலம் பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை: வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!வேலூர், ஏப். 17-தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்க, ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை பொது முகப்பு (UPI) மூலம் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் நாள் தோறும் நடைபெறும் UPI பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு அதுகுறித்த அறிக்கைகள் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.ஒரே கணக்கிலிருந்து பலருக்கு UPI மூலம் பணம் அனுப்பப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், பணம் பெற்றவர்கள் மீதும் தேர்தல் விதிமுறைகளின்படி நடவடிக்கை பாயும். வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123(1)-இன் கீழ் ஊழல் நடைமுறையாகவும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, பிரிவு 169-இன் கீழ் தேர்தல் குற்றமாகவும் கருதப்படுகிறது.தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவோ அல்லது வாக்காளர்கள் பணம் பெறவோ கூடாது என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.