முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: குலுங்கியசெய்யாறு நகரம்!செய்யாறு, ஜூன் 23 -தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்த நாள் விழாவை, த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடியதால் செய்யாறு நகரமே குலுங்கியது.தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பின்பு, அவரது 52வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செய்யாறில் மாவட்ட செயலாளர் உதயகுமார் உத்தரவின் பேரில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, அணி அணியாக சேர்ந்து நகரம் முழுவதும் முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். செய்யாறு பஸ் நிலைய நுழைவு வாயிலில் த.வெ.க.,வின் நிர்வாகி சரவணன் ஏற்பாட்டில் 52 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் த.வெ.க.,வின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதேபோல் செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டின் நுழைவு வாயிலில், மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில், செய்யாறு ( தெற்கு ) நகர செயலாளர் பெரோஸ்கான், நகர ( வடக்கு ) துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழாவை பொதுமக்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர்.500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க., பொறுப்பாளர்களான பிரசாந்த், பிரபாகரன், ஏ.சசிகுமார், பூபாலன், ஆர்.சசிகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதேபோல் செய்யாறு நகர் முழுவதும் முதல்வரின் பிறந்தநாள் விழா எடுக்கப்பட்டதால் செய்யாறு நகரமே குலுங்கியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply