வேலூர்,அக்.29-
வேலூர் மாநகராட்சி ஆணையர் அ. கேத்தரின் சரண்யா டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பேரில் வேலூர் மாநகராட்சி 3வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில் மண்டலம் 3 சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி முதலியார் நிதியுதவி மேல்நிலைப் பள்ளியில் மாணவ ,மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கச் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய ஈடிஸ் கொசுக்கள் சுத்தமான நீரில்தான் உற்பத்தியாகும்.குறிப்பாக பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களில் மழை நீர் தேங்கும் போது கொசுக்கள் உற்பத்தியாகும். இது போன்ற பொருட்களில் மழை நீர் தேங்காதவாறு அகற்ற பொதுமக்கள் தாங்களாக முன்வர வேண்டும். வீடுகளில் சேமித்து வைக்கும் குடிநீர் பாத்திரங்களை மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என விழிப்புணர்வு வழங்கினார் டாக்டர் சிவக்குமார். இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் ஆசிரியர்கள், துப்புரவு ஆய்வாளர் அருண்குமார், துப்புரவு ஆய்வாளர் ராதா மற்றும் சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.














Leave a Reply