பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு புகார்: கும்பகோணம் மண்டலப் பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

வேலூர், நவ. 3-
இதில் நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவோம் – தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.டி. காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
( வேலூர் மாவட்டம் ) தமிழ்நாடு, சென்னை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலப் பொது மேலாளர் ஏ.டி. நடராஜன் மீது பெண் பணியாளர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும், பணியாளர்களை மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1995-ஆம் ஆண்டு பொது நிலையாணைக்கு முரணாகச் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மதுரை மண்டலத்தில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றிய ஏ.டி. நடராஜனுக்கு, கும்பகோணம் மண்டலப் பொது மேலாளராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நிர்வாக நடைமுறைகளைக் கையாளும் திறமையும் பொதுமக்கள் என்றால் என்ன என்பதும் பொதுமக்கள் வரி பணம் என்றால் என்ன என்பதும் சிறிதளவு கூட பொருட்படுத்தாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நபர் மற்றும் சாதாரண சாதாரண பொது மனித உரிமை சட்ட அறிவும் இல்லை எனக் குற்றம்சாட்டியுள்ள தொழிற்சங்கப் பேரவை, அவரைப் பழைய பதவிக்குப் பதவியிறக்கம் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.டி. காமராஜ், கடந்த 15.10.2026 அன்று போக்குவரத்துத் துறைச் செயலாளருக்குப் பதிவு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார். இதுவரை எழுத்துப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த POSH சட்டம் 2013-ன்படி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். புகார் அளித்தவர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில மகளிர் ஆணையத்தை அணுகுவதுடன், தேவையானால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்கப் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.டி. காமராஜ் எச்சரித்துள்ளார்.