
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 37 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற மு. தங்கத்துரைக்கு சமயநல்லூரில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர் சி.தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு வி.எம்.டி. முத்துப்பாண்டி (ஓய்வு-காவல்துறை) தலைமை தாங்கினார். சமயநல்லூர் தி.மு.கிளைக் கழக அவைத் தலைவர் எஸ்.சிதம்பரம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் கணேசன், வழக்கறிஞர் ச.கந்தசாமி, காவல்துறை அலுவலர் எஸ்.சுந்தர், ராஜ்குமார், சிரஸ்தார் டி.வில்சன், தொழிலதிபர் வி.வைரவன், பாலு (பிஆர்.சி-ஓய்வு), மற்றும் இராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.













Leave a Reply