செவ்வணக்க கண்ணீர் அஞ்சலிநம் தோழர் PSD புருஷோத்தமன் காலமானார்

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் மாபெரும் தலைவர் ,களப் போராளி ,தலைநகர் சென்னை மற்றும் மாவட்ட தலைமியிடங்களில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் அரசின் அங்கீகாரம் கடைக் கோடி ஊராட்சிகளில் ,ஊராட்சி ஒன்றியங்களில்,தாலுக்கா பகுதிகளில் செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்க வேண்டும். தமிழ்நாடு பத்திரிகையாளர் நல் வாரியத்தில் உறுப்பினராக்க வேண்டும் என்று தொடர்ந்து உரத்த கோரிக்கை குரல் எழுப்பியவர் நம்முடைய தோழர் புருஷோத்தமன். பொதுவுடமை இயக்க பின்புலத்தில் இருந்து வந்து பத்திரிகையாளர் நலன்களுக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைத்த மாமனிதர் தோழர் புருஷோத்தமன்.

பத்திரிகையாளர் அமைப்புகளுக்கிடையே சில முரண்பாடுகள் ஏற்பட்ட போதெல்லாம் சமரசத் தூதராக செயல்பட்டார். ஒற்றுமையே பலம் என்பதில் உறுதியாக இருந்து பத்திரிகையாளர் அமைப்புகளின் கட்டமைப்பு ஒன்றை கட்டமைத்தவர்.

தோழர் புருஷோத்தமன் ,பத்திரிகையாளர் நலன்கள்,கோரிக்கைகள் குறித்து உருவாக்கிய சாசனம் இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்தது.பத்திரிகையாளர் நலன் சார்ந்து வாழ்க்கையை நடத்திய தோழர் புருஷோத்தமன் ,பத்திரிகையாள ஓய்வூதியம் கூட பெறவில்லை. வாழ்நாள் முழுவது கடைக்கோடி பத்திரிகையாளர் நலன்களுக்காக உரிமைகளுக்காக போராடிய உயர்ந்த தலைவர் தோழர் புருஷோத்தமன் இன்று 27-06-2026 சனிக்கிழமை திருவாரூர் அரசு பொது மருத்துவமனையில் காலமானார் . தமிழ்நாடு முழுவதுமுள்ள பத்திரிகையாளர்கள் சார்பில் தோழர் PSD புருஷோத்தமன் அவர்களுக்கு செவ்வணக்க கண்னீர் அஞ்சலி செலுத்துகிறோம். கிட்டதட்ட அரை நூற்றாண்டு காலம் பத்திரிகையாளர் நலன்களுக்காக பாடுபட்ட தோழர் புருஷோத்தமன் இறுதி அஞ்சலியில் அரசு மரியாதை வழங்க தமிழக அரசை வேண்டுகிறோம். பத்திரிகையாளர் புருஷோத்தமன் புகழ் ஓங்குக, செவ்வணக்கம் செய்கின்றோம்.

தோழர் புருஷோத்தமன் நினைவில் வாடும்
பத்திரிகையாளர்கள்.