
குடியாத்தம் பிரம்மாஸ் வித்யாலயா பள்ளியிலிருந்து வெளியில் வந்து சாலையில் பைக்கில் சென்ற மாணவர் மீது கைப்பந்து விழுந்து படுகாயம்!வேலூர்,ஜூலை 5-வேலூர் மாவட்டம், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை மல்லப்பன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கஜேந்திரன். இவர் பிளஸ் டூ தேர்வு எழுத கடந்த 3ம் தேதி வேலூர் நகருக்கு சென்று விட்டு தேர்வு முடிந்ததும் மீண்டும் மோட்டார் பைக்கில் வீட்டுக்கு குடியாத்தம் நோக்கி திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பிற்பகல் சுமார் 2.30 மணி அளவில் குடியாத்தம் ரயில் நிலையம் மேம்பால இறக்கத்தில் வரும்போது எதிரில் உள்ள பிரம்மாஸ் வித்யாலயா பள்ளியில் இருந்து வெளியே வந்து கைப்பந்து ஒன்று விழுந்தது. அது கஜேந்திரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது சக்கரத்தில் விழுந்து சிக்கியது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கஜேந்திரனின் தந்தை முருகையன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று தனது மகனை சேர்த்துள்ளார். இந்த குடியாத்தம் பிரம்மாஸ் வித்யாலயா பள்ளிக்கு என விளையாட்டு மைதானம் இல்லை என்று கூறப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் விளையாடினால் இப்படி கைப்பந்து மற்றும் கால்பந்து பள்ளியில் இருந்து வெளியில் வந்து சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் மீது விழுந்து விபத்துக்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நிரந்தர நடவடிக்கையை கல்வித்துறை மற்றும் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி பொதுமக்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் நிகழாத வண்ணம் வழிவகை செய்து தர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.விலை மதிப்பில்லாத மனித உயிர்களை இந்த பிரம்மாஸ் வித்யாலயா பள்ளி காவு வாங்குவதற்குள் ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ,வாகன ஓட்டிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இது பொதுமக்களின் நலன் கருதி மட்டுமே இந்த செய்தி வெளியிடப்படுகிறதே தவிர எந்த காழ்ப்புணர்ச்சியும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இந்த செய்தி வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிக்கென தனியாக விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தி ஒதுக்குப்புறமாக வைத்து விளையாட வழிவகை செய்ய வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையை குடியாத்தம் பகுதி மக்கள் விடுத்துள்ளனர் .தற்போது இந்த விபத்து குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் முருகன் தனது மகன் விபத்தில் சிக்கியது எப்படி என்று புகார் மனுவை முறைப்படி கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடியாத்தம் நகர காவல் துறை உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா? அல்லது இந்த புகார் மனுவை உதாசீனப்படுத்தி கண்டும் காணாமல் விட்டுவிடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்காக பொதுமக்கள் இல்லை, பொதுமக்களுக்காகத்தான் பள்ளி என்பதையும் இந்த பிரம்மாஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம் உணர வேண்டும் என்பது இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply