வேலூர் கொசப்பேட்டையில் கால்வாய் அடைப்பு – பாதிக்கப்பட்ட இடத்தில் நின்று பணியை சீரமைத்த எம்.எல்.ஏ. வினோத் கண்ணன்!

வேலூர்,அக்.23-
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி, 3-வது மண்டலம், கொசப்பேட்டை, பென்0ட்லேண்ட் மருத்துவமனை அருகே உள்ள கந்தசாமி ஜபேதார் தெருவில், பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கனமழையால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டதுடன், நோய்கள் பரவும் அபாயமும் உருவானது.
இதையடுத்து, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் கால்வாய் அடைப்பைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கும் அருகிலுள்ள மருத்துவமனைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டதுடன் அந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை ஊழியர்களை அழைத்து அங்கு நின்று புனிதமாக அந்தப் பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்தார். இதனால் வேலூர் எம்எல்ஏ வினோத் கண்ணனை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.