செய்யாறு, நவ. 5 –
செய்யாறைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை, மாவட்ட திட்ட இயக்குநர் காஞ்சனா நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பான விவரங்களையும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அருகாவூர் ஊராட்சியில் அரிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதிய குளம் வெட்டும் பணி, அருகாவூர் பெரிய ஏரிக்கு வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி, பெரும்பள்ளம் கிராமத்தில் புதிய சுகாதார வளாகம், தனிநபர் கழிவறை கட்டடம் கட்டும் பணிகள் ஆகிய நடந்து வரும் வருகின்றன.
இந்த வளர்ச்சிப் பணிகள் எவ்வாறு நடந்து வருகிறது என, மாவட்ட திட்ட அலுவலர் காஞ்சனா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்னமும் எத்தனை சதவீதம் பணிகள் முடிக்க வேண்டும். 100 நாள் வேலை உறுதி அளிப்பது, திட்டப் பயனாளிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு வங்கி கணக்கில் பணம் வருகிறதா உள்ளிட்ட விவரங்களை, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், திட்ட இயக்குநர் காஞ்சனா கேட்டறிந்தார்.












Leave a Reply