சென்னை பெருநகர காவல் துறையின் அதிரடி!

சிறுவர்கள் விளையாடும் 500 ரூபாய் காகித நோட்டை பழம் விற்கும் மூதாட்டியிடம் கொடுத்து ஏமாற்றி பழம் வாங்கி சென்றுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், ஏமாற்றப்பட்ட மூதாட்டியின் புகாரின் பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் குற்றவாளியை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தன்னுடைய புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு மூதாட்டி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

SM.கனி சென்னை செய்தியாளர்