Archives
July 2026
June 2026
May 2026
April 2026
March 2026
February 2026
January 2026
December 2025
November 2025
October 2025
September 2025
Categories
Uncategorized
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
செய்திகள்
நிகழ்ச்சிகள்
விளையாட்டு
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
செய்திகள்
அரசியல்
ஆன்மீகம்
கல்வி
குற்றம்
நிகழ்ச்சிகள்
வர்த்தகம்
விளையாட்டு
உலக செய்திகள்
Uncategorized
வேலூர் பலவன்சாத்துகுப்பத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 17-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மற்றும் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர், வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி எழில் நகர் ஏரிக்கரை பகுதியில்திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் பகுதி செயலாளர் சி. எம்.தங்கதுரை திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர்.
வாக்காளர்களுக்கு UPI மூலம் பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை: வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!வேலூர், ஏப். 17-தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதைத் தடுக்க, ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை பொது முகப்பு (UPI) மூலம் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கத் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் மூலம் நாள் தோறும் நடைபெறும் UPI பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு அதுகுறித்த அறிக்கைகள் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.ஒரே கணக்கிலிருந்து பலருக்கு UPI மூலம் பணம் அனுப்பப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், பணம் பெற்றவர்கள் மீதும் தேர்தல் விதிமுறைகளின்படி நடவடிக்கை பாயும். வாக்காளர்களுக்கு லஞ்சம் அளிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 123(1)-இன் கீழ் ஊழல் நடைமுறையாகவும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, பிரிவு 169-இன் கீழ் தேர்தல் குற்றமாகவும் கருதப்படுகிறது.தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கவோ அல்லது வாக்காளர்கள் பணம் பெறவோ கூடாது என்று ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நான் யாரிடமாவது லஞ்சம் வாங்கினேன் என நிரூபித்தால் நெருப்பில் குதித்து விடுகிறேன் தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சுவேலூர், ஏப்.17-வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் துரைமுருகன் போட்டியிடுகிறார். அவர் காட்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .தற்போது அவர் பொதுமக்களிடையே பேசுகையில்: நான் யாரிடமாவது ரூ.1 லஞ்சம் வாங்கினேன் என நிரூபித்தால் நெருப்பில் குதித்து விடுகிறேன். அதேபோன்று நான் ஒழுக்கம் இல்லாதவன் பெண்களுடன் சுற்றித்திரிந்தேன் என்று கூறினால் தூக்கில் தொங்கி விடுகிறேன் என்று கூறினார். இந்த முறை நீங்கள் வழக்கம் போல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்டு பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின் போது திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.
எலுமிச்சம் பழம் விலை கடும் உயர்வு :வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!
அரியலூர் மாவட்டம், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் கைலாஷ் வான்கடே, இ.ஆ.ப., மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் / உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இரண்டாம் கட்ட தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி முடிவுற்றது.
16.04.2026 இன்று(வியாழன்) பாராளுமன்றத்தில் தொகுதி வரையரை மசோதா தாக்கல் செய்வதை கைவிட்டு மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மசோதாவை திருத்தி தாக்கல் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரிய நாயக்கன் பாளையம் பகுதி கிளைகளின் சார்பாக கறுப்புக்கொடி ஏந்தப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரத்தை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மேட்டுப்பாளையம் தாலுகாசி.ஐ.டி.யு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தனர் இதில் சிஐடியு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாஷா மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேட்டுப்பாளையம் தாலுகா சட்டமன்ற கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வெற்றி வேட்பாளர் SMT கவிதா கல்யாண சுந்தரத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒன்றிய அரசு அறிவித்ததொகுதி மறு வரைசட்டத்தை எதிர்த்து மேட்டுப்பாளையம் சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கருப்புக் கொடி ஏற்றிநகலை எரித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர்இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் சி ஐ டி யு நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதையொட்டி, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பபதிவு பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடுகள், வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதை 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரியங்கா சிங்லா, இ.ஆ.ப., அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் ஓம் பிரகாஷ் திரிபாதி, இ.கா.ப, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள அரசு அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவுகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1
…
41
42
43
…
115
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.