தவெக அமைச்சரவையில் சகாயம் ஐஏஎஸ் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர்?வேலூர், மே 6-தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட ஏற்பாடு எனவும் சூசகம்.தமிழகத்தின் கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கனிமவள கொள்ளையர்களுக்கு காப்பு கட்ட ஏற்பாடு என தகவல்.இயற்கையை பாதுகாக்க தவெக நடவடிக்கை எடுக்கும் சிறப்பு முயற்சி என தகவல்.தமிழகத்தில் கனிமவள கொள்ளைக்கு முற்றுகட்டை வைக்க கனிம வள கொள்ளையர்களுக்கு அதிர்ச்சி தகவலாக ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சகாயத்தை தவெக அமைச்சரவையில் சேர்த்து அவரை சுரங்கம் மற்றும் கனிமவளத்துறைக்கு அமைச்சராக்கவும் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்யும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வைத்து அமைச்சரவையில் தக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சூசகமாக தகவல்கள் வெளியாகி உள்ளது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.ஏற்கனவே கனிமவள கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். மிகவும் நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றவர். இதனால் அவர் திமுக மற்றும் அதிமுக அரசுகளால் பந்தாடப்பட்டு முக்கிய பதவிகளில் அவரே தொடர விடாமல் செய்தனர்.மேலும் அவர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கனிம வள கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் ஆய்வு செய்தபோது அரசு தரப்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில் சம்பவ இடத்திலேயே ஆதாரங்களை காப்பாற்ற சுடுகாட்டில் கட்டில் போட்டு இரவு உறங்கியவர் என்பதும் அது அவருடைய நேர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.தற்போது புதிதாக ஆட்சி அமைக்கும் தவெக தலைவர் விஜய் அவர்கள் புதிய அமைச்சரவையில் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக சகாயம் அவர்களை நியமிக்க ஆலோசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவலால் கனிமவள கொள்ளையர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் இயற்கையை பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் அதனால் கனிம வள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சரவையில் அது தொடர்பாக மக்களுக்கு பாதுகாப்பான அளவில் தமிழகத்தை பாதுகாக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து விவகாரங்களையும் கருத்தில் கொண்டு கனிமவள கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் தவெக தலைவர் விஜய் அவர்களின் முக்கிய நடவடிக்கையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆகவே தமிழகத்தில் கனிமவள கொள்ளையர்களுக்கு காப்பு கட்டும் நடவடிக்கையை தவெக எடுக்கும் என்பதுதான் தற்போதைய செய்தியாக உள்ளது.

துரோகிகளும் எதிரிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர் :புரட்சித்தாய் சின்னம்மா வி. கே. சசிகலா !சென்னை, மே 5-2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து புரட்சித்தாய் சின்னம்மா வி. கே. சசிகலா அவர்கள் வெளியிட்ட அறிக்கை :நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பேரவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு முதலில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் எனது பிரதான கோரிக்கையை மக்கள் அங்கீகரித்து உள்ளார்கள், எதிரிகளும், துரோகிகளும் வீழ்த்தப்பட்டுள்ளார்கள். திமுக மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக வரலாற்றில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் த/விஜய்க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், நலனுக்காகவும் எனது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். எனது எஞ்சியிருக்கும் காலம் முழுவதும் தமிழக மக்களுக்காகவே உழைப்பேன் என்றும், தமிழக மக்களுக்கு என்றென்றும் துணை நிற்பேன் என்றும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NEET தேர்வு அரைஞாண் கயிறை அறுக்க கல்லைப் பயன்படுத்திய பெற்றோர் – காட்பாடியில் அரங்கேறிய சம்பவம்!வேலூர், மே 4-மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது.தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மாணவர் ஒருவர் அணிந்திருந்த அரைஞாண் கயிறு விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படாது என தெரியும். அந்த நிலையில் கயிறை அகற்ற கத்தரிக்கோல் அல்லது பிளேடு போன்ற பொருட்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.இதனையடுத்து, தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்த மாணவனின் பெற்றோர் அங்கிருந்த ஒரு கருங் கல்லைக் கொண்டு கயிறைத் தேய்த்து அறுத்து அகற்றினர். பிறகு கயிறு அகற்றப்பட்டதையடுத்து, அந்த மாணவர் நிம்மதியுடன் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்கப்பட்டார்.தேர்வு விதிகளால் ஏற்பட்ட இந்தச் சிறு பரபரப்பு அங்கிருந்த மற்ற பெற்றோர்களிடையே பேசுபொருளானது.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த தமுமுகவினர்!வேலூர், மே 4-வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்வேப்பூர் கிராமத்தில் இருப்பதாக தகவல் வந்தது.இதை அறிந்து அங்கு சென்ற தமுமுகவினர் பெண்ணைப் பற்றி விசாரித்து அவரின் குடும்பம் கீழ்விஷாரம் நகரத்தில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அங்குள்ள தமுமுக நிர்வாகி மூலம் அவரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் அவருடைய குடும்பத்தினர் குடியாத்தம் வேப்பூர் கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் தமுமுக நிர்வாகிகள் அப்பெண்ணையும், அவரின் குடும்பத்தையும் குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்து அங்குகிருந்து முறைப்படியாக அவருடைய குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார்.முன்னதாக வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணிற்கு இருக்க இடம், உண்ண உணவு கொடுத்து தேவையான உதவிகள் செய்தனர்.இந்த மனித நேய பணியில்S.ஷஹாபுத்தீன்,தலைவர்,தமுமுக,மற்றும்மனிதநேய மக்கள் கட்சிகுடியாத்தம்வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்!வேலூர், மே 4-விவசாயிகளே தயவுசெய்து உங்கள் விலை பொருட்களையும், விளைந்த நெல்லையும் வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.வேலூர் மாவட்டம், வேலூர் விற்பனைக் குழு செயலாளரின் அறிவுரையின்படி, வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தினை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அணைக்கட்டு தாலுகா – தார்வழி, அணைக்கட்டு, அப்புக்கல் உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று விவசாயிகளை தனித்தனியாக சந்தித்து, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பயன்கள் குறித்து அலுவலர் எடுத்துரைத்தார். விவசாயிகளே தயவுசெய்து உங்கள் விளை பொருட்களையும், விளைந்த நெல்லையும் வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.இவ்விழிப்புணர்வு நடவடிக்கையின் போது துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த பணிகளில் இளநிலை கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் மற்றும் அலுவலக உதவியாளர் கி. அன்பரசு, துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை – தமிழகத்தில் யார் பெறுவார் இந்த அரியாசனம்!வேலூர், மே 4-தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முதலில் 8:00 தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு EVM-ல் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். முன்பெல்லாம் நண்பகலிலேயே யார் ஆட்சி என்பதை கணித்துவிட முடியும்.ஆனால் தற்பொழுது உள்ள தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக விரைவில் தெரிந்து கொள்ளலாம்.தமிழகம் மட்டுமல்லாது மேற்கு வங்க தேர்தலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.