காட்பாடியில் போலீசார் ‘வாக் பேட்ரோல்’ தீவிர ரோந்துப் பணி!வேலூர், ஜூன் 14-பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காட்பாடியில் போலீசார் தீவிர ‘வாக் பேட்ரோல்’ (நடை ரோந்து) பணியில் ஈடுபட்டனர்.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனின் அறிவுறுத்தலின்படி, காட்பாடி காவல் ஆய்வாளர் தயாளன் தலைமையில், போலீசார் இந்த தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.காட்பாடி வள்ளிமலை கூட்டுச் சாலையில் தொடங்கி குடியாத்தம் சாலை வரை போலீசார் நடந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் இந்த தீவிர நடை ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘எந்த ஒரு நிலங்களையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’செய்யாறில் பாதிக்கப்பட்டுள்ள மேல்மா கிராம விவசாயிகளிடம்பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!செய்யாறு, ஜூன் 14 -‘எந்த ஒரு நிலத்தையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’ என செய்யாறு சிப்காட் விரிவாக்க பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள’மேல்மா கிராமத்து’ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தபோது, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக பேசினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்துள்ளது மாங்கால் கூட்டுரோடு. இங்கு கடந்த 2006ம் ஆண்டு 2,400 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது.‌ இங்கு தற்பொழுது 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்பூங்காவின் விரிவாக்கத்திற்காக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையான மேல்மா மற்றும் சுற்றியுள்ள 10 கிராமங்களில் 2000 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவதாக நான்கு ஆண்டுகளாக அதிகாரிகள் – விவசாயிகளிடம் மல்லுக்கட்டி வருகின்றனர்.நில உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி, இந்த விவசாய நிலங்களையும், அதிகாரிகள் தேர்வு செய்து அளந்தெடுத்து விட்டனர். சில விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் இழப்பீட்டுத் தொகையையும் அரசு செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.எங்களது நிலத்தை தொழிற்பூங்காவுக்கு கொடுக்க மாட்டோம் என, விவசாயிகள் பிடிவாதமாக இருந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க், நில எடுப்பு அதிகாரிகள், செய்யாறு, வெம்பாக்கம் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மேல்மா மற்றும் சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கலந்தாலோசித்தனர்.அப்பொழுது மேற்கண்ட கோரிக்கைகளை விவசாயிகள் அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் முன் வைத்தனர். இந்த கோரிக்கைகளை முழுமையாக கேட்ட பின்பு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விவசாயிகளிடம் கூறியதாவது; ‘தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக முக்கியமானது என்று கருதப்பட்டாலும், தமிழக முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் இருப்பார். ‘எந்த ஒரு நிலமும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’. சிப்காட் தொழில் பூங்காவிற்காக நிலம் கையகப்படுத்துவது குறித்து ‘உண்மை – தன்மை’ அறியும் வகையில் கமிட்டி ஒன்று அமைக்கப்படும். தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர், அதிகாரிகளை நம்புங்கள். நானும் மாதம் ஒரு முறை உங்களை வந்து சந்திப்பேன் உங்களது விவசாய நிலங்களை சிப்காட் விரிவாக்கத்திற்கு தாராவார்க்கவிடமாட்டேன். உங்களது கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் பேசி உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொடுக்கிறேன். திருவண்ணா மலையின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் எளிமையான இவரும் அருள் ஆறுமுகமும் உங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்; ‘இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விவசாயிகளிடம் பேசினார்.இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட த.வெ.க.,வின் ஒன்றிய செயலாளர்களான தினேஷ்குமார், சேதுபதி, சிவ விநாயகம், குமரேசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என, பலரும் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்திறன் அடிப்படையில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு :பழங்குடியின மக்களுக்குகலெக்டர் சினேகா அழைப்பு !காஞ்சிபுரம், ஜூன் 14 -தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் பயன் பெற வேண்டுமென கலெக்டர் சினேகா அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு,கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள், பி.இ., மெக்கானிக்கல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ, 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் மட்டும் வழங்கப்படும்.மேலும் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் வழங்கப்படும். அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான ( www.tahdco.com ) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்; ‘இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலூர் பள்ளிகொண்டா ஆதி வராஹி கோயிலில் கைத்தறி துறை அமைச்சர் தரிசனம்!வேலூர், ஜூன் 14-தமிழக அரசின் கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி உலகிலேயே மிகப்பெரிய வாராஹி கோயில் வேலூர் பள்ளிகொண்டா த்ரீஸ்தலம் ஆதி வாராஹி ஷேத்திரத்துக்கு வந்து வாராஹி தரிசனம் செய்து யாகரிஷி வராஹ குருஜியிடம் ஆசிகள் பெற்றார். அமைச்சருடன் தவெக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், கீ .வ .குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தென்றல் குமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர்.

நில உரிமையாளரிடம் முறையாக அனுமதி பெறாமல் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் உரிமையாளர் மீது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார்!வேலூர், ஜூன் 13-வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அணைக்கட்டு தாலுக்கா, கந்தனேரி ஊராட்சியில் சுமார் 15 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த இடத்திற்கு பஞ்சமி நில உரிமையாளரிடம் முறையாக எவ்விதமான அனுமதியையும் பெறாமலும், விளைநிலங்களை சேதப்படுத்தியும், நிலத்தை ஆக்கிரமித்து நடைபெற இருந்த நிகழ்ச்சியை நிறுத்தி வைக்குமாறு அந்தப் பகுதி தலித் சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். அந்தப் புகாரின் பேரில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அணைக்கட்டு வட்டாட்சியர் ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிலம் தலித் மக்களின் நிலம் என்றும், அவர்களிடம் முறையாக முன் அனுமதியும் பெற்ற பிறகு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அந்த நிலம் அரசு நிலமும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் நில உரிமையாளர்களிடம் முறையாக முன் அனுமதி பெற்ற பிறகே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் பள்ளிகொண்டா ஆய்வாளருக்கு, அணைக்கட்டு வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்னிசை ராஜாங்கம் கச்சேரி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கான கட்டமைப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இந்த இசை நிகழ்ச்சி என்று நடைபெறும் என்று ரசிகர்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்து ள்ள பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். எது எப்படி போனாலும் ரசிகர்கள் ஏமாற்றம் இன்றி நிகழ்ச்சியை கண்டுகளிக்க வழிவகை செய்தால் சரி என்கின்றனர் சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும். இளையராஜா இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலூர் கோட்டை மைதானத்தில் டிஎஸ்பி சீருடையில் திரிந்த பெண்ணை கைது செய்த போலீசார்! வேலூர், ஜூன் 13 -வேலூர் கோட்டை மைதானத்தில் உள்ள பூங்காவில் ஒரு இளம்பெண் டிஎஸ்பி சீருடையில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவரைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் இதுகுறித்து வடக்கு காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆய்வாளர் உத்தரவின் பேரில் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்படி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் போலி டிஎஸ்பி உடையில் இருந்தது தெரியவந்தது. அவர் வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த நேமபந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி (33).  இவரது கணவர் கூலி தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். உமா மகேஸ்வரி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளதும் தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் தங்கி ஒரு வீட்டில் வேலை செய்துள்ளார். அந்த வீட்டில் 22 பவுன் நகை திருட்டு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல்  சென்னை பூக்கடை பகுதியில் உறவினர் வீட்டில் ரூபாய் 15,000 திருடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேலூர் மேல் அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு அறிமுக நண்பராகி அந்த நபர் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க டிஎஸ்பி சீருடை அணிந்து வேலூருக்கு வந்துள்ளதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். ஆண் நண்பர் வர கால தாமதமானதால் வேலூர் காவலர்களிடம் சிக்கிக் கொண்டுள்ளார் உமாமகேஸ்வரி. உமாமகேஸ்வரியிடம் வேலூர் வடக்கு போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துக் கொண்டிருந்த வேள

காஞ்சிபுரம் மாவட்டத்தில்கால்நடைகள் குறித்த விவரங்கள்மின்னணு மூலம் கணக்கெடுக்ககலெக்டர் சினேகா உத்தரவு!காஞ்சிபுரம், ஜூன் 13 – காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளின் முழு விவரங்களை, மாவட்ட கலெக்டர் சினேகா உத்தரவின் பேரில்,தேசிய மின்னணு இயக்க வழி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்க உள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பு வருமாறு;’காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம மக்களால் வளர்க்கப்பட்டு வரும் 18 லட்சத்து 78 ஆயிரத்து 909 கால்நடைகளுக்கு, 12 இலக்க காதுவில்லை அடையாள எண் பதிவு செய்யப்பட உள்ளது. பின்னர் இதன் முழு விவரத்தையும் மின்னணு தகவல் மூலம் பதிவேற்றம் செய்திட தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் வகுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, மாவட்டத்தில் உள்ள கால்நடைகளின் செயற்கைமுறை கருவூட்டல், கால்நடை காப்பீட்டு விவரம், சினையுறு சதவீதம், கன்று ஈன்ற விவரம் ஆகியவை கணக்கில் எடுக்க வேண்டும்.கன்று பிறப்பு விகிதம், உரிமையாளர் பதிவு மற்றும் பெயர் மாற்றம், பருவத்திற்கேற்ப மேற்கொள்ளப்படும். கோமாரி நோய், தோல் கழலை நோய், அடைப்பான் நோய் ஆகியவற்றிற்கான தடுப்பூசி பதிவுகள், நோய் கிளர்ச்சி அறிக்கை, பால் உற்பத்தி பதிவு விவரங்கள் ஆகிய தரவுகள் சேகரிப்பட்டு கணக்கில் எடுக்கப்படும். இந்த விவரங்களை கால்நடை பராமரிப்புத் துறை மூலம் தேசிய மின்னணு இயக்க வழி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.இந்த விவரங்களை பதிவேற்றம் செய்யும்போது உரிமையாளரின் கைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை ஒருங்கிணைத்து விவசாயின் கைபேசிக்கு அனுப்பப்படும். விவசாயிகளின் செல்போன் ‘மெசேஜி’ மூலம் கால்நடைகளின் முழு விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்களது கால்நடைகளை கொள்முதல் – விற்பனை ஆகியவை மேற்கொள்ளும் போது, கால்நடைகள் பற்றிய முழு விவரமும் கால்நடை வளர்ப்போர் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட பணி தொடர்பாக கிராமங்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினர் வருகை தரும்போது, கால்நடை வளர்ப்போர் தங்கள் செல்போனுக்கு வரும் ‘மெசேஜ்’ மூலம் கேட்கப்படும் விவரங்களை தெளிவாக தெரிவிக்குமாறு கால்நடை வளர்ப்போர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்– பெரும் விபத்து தவிர்ப்பு!வேலூர், ஜூன் 12-காட்பாடி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.நேற்று (11.06.2026) அதிகாலை சுமார் 2.40 மணியளவில், லத்தேரியில் Track Packing Machine பணியை முடித்துவிட்டு திரும்பிய SSE/P.Way விஜய் குமார், கி.மீ. 130/27 பகுதியில் கீழ்பாதை தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். முதலில் கி.மீ. 137 என தகவல் கிடைத்த நிலையில், ASI/RPF காட்பாடி பி. ஆர். முரளி சம்பவ இடத்தை உறுதி செய்து உடனடியாக RRI கேபினை தொடர்புகொண்டு, ஜோலார்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் எண் 13351 தன்பாத்–ஆலப்புழா எக்ஸ்பிரஸை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.பின்னர் ASI பி. ஆர். முரளி மற்றும் தலைமைக் காவலர் எம். சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தின் மீது தலை வைத்து படுத்திருந்த நபரை பாதுகாப்பாக அகற்றி அவரது உயிரைக் காப்பாற்றினர். அதன் பிறகு ரயில் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.மீட்கப்பட்ட நபர் பி. ராமச்சந்திரன் (46), வேலூரைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டதுடன், மேல்கட்ட நடவடிக்கையாக மனநல பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காட்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.