வேலூர், அக். 28-
வேலூரில் உள்ள சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, 30 வயதைக் கடந்த அனைத்து பெண் அரசு ஊழியர்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.முன்னெச்சரிக்கை பரிசோதனையின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. து. சுரேஷ், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மரு. சிவக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. விஜய் சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, ஊரக வளர்ச்சித் துறைப் பயிற்சி உதவி இயக்குநர் செல்வி மூ.காவ்யா துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இம்முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வேலூர் செஞ்சிலுவை சங்கம் ரெட் கிராஸ் ரெட் கிராஸ் தலைவர் டி எஸ் உதயசங்கர், செயலாளர் பர்வதா, பொருளாளர் ஆடிட்டர் பாண்டியன், மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர். இந்தர்நாத், மேனேஜர் தீபன், கமிட்டி உறுப்பினர் வேல்முருகன், டிஜிட்டல் மேமோகிராஃபி ஒருங்கிணைப்பாளர் கோ-ஆர்டினேட்டர் மதியழகன், மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.











Leave a Reply